பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வந்த மீனா.. நறுக்கென்று அம்மா கேட்ட கேள்வி..முல்லையால் புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் செப்டம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மீனா தன்னுடைய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு கயலை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி தன்னுடைய அப்பா வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் முல்லை நான் கதிரை பார்க்க வேண்டும் என்று புதியதாக பிரச்சனை செய்து அழுது கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் வீட்டில் முல்லை சாமி புகைப்படத்தில் முன்பு அழுது கொண்டிருக்க, அப்போது முல்லையின் அப்பா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு வர அவரை பார்த்ததும் முல்லை தனம் என எல்லோரும் ஜீவா கதிர் நல்லா இருக்காங்களா? எப்ப அவங்க வீட்டுக்கு வருவாங்க என்று அழுதபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி மீனாவின் அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா? அவங்க மருமகன் இப்படி எல்லாம் பண்ணுவானா? என்று கொஞ்சம் யோசிச்சு பார்க்க மாட்டாங்களா? இப்படி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதோடு ஒருவேளை நம்ம புது வீட்டுக்கு வந்த நேரம் சரி இல்லையோ என்னவோ தெரியல என்று ஐஸ்வர்யா சித்தி கேள்வி கேட்க, அதற்கு கண்ணன், முல்லையின் அப்பா என எல்லோரும் இப்படி எல்லாம் பேசாத என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மீனா வீட்டிற்குள் வருகிறார்.
அப்போது மீனாவிடம் தனம் வா மா மீனா அப்பா எப்படி இருக்காரு? என்று கேட்க, மீனா எதுவும் பேசாமல் கோபத்தில் விறுவிறுவென்று மாடிக்கு போய் விடுகிறார். மீனா மீனா என்று தனம் கூப்பிட்டுக் கொண்டிருக்க மீனா எட்டி பார்க்காமல் போனதால் ஐஸ்வர்யா இருங்க அக்கா நான் போய் பாத்துட்டு வரேன் என்று அங்க போய் மீனாவிடம் பேச்சு கொடுக்க, மீனா வெளியே போய் ஐஸு என்று திட்டி ஐஸ்வர்யத்தை அனுப்புகிறார்.
கூடவே பேக்கில் துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு கீழே வந்து கயலை எல்லாரும் முன்பும் திட்டி விட்டு, நான் உங்க வீட்ல இருந்து பட்ட கஷ்டங்கள் போதும் ஒவ்வொரு முறையும் நான் உங்க எல்லாருக்கும் சப்போர்ட் செய்து எங்க அப்பாவ கஷ்டப்படுத்திட்டேன். நான் இனி இந்த வீட்டுல இருக்கல என்று சொல்லி கயலையும் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி போய் விடுகிறார்.
எல்லாரும் எவ்வளவோ தடுத்து பார்த்தும் மீனா போய்விட்டதால் பிறகு வீட்டில் முல்லை அழுது கொண்டே இருக்கிறார். அதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஜாமீனுக்காக மூர்த்தியும், தனத்தின் அண்ணனும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு தனம் முல்லை, முல்லையின் அப்பா என எல்லோரும் அங்கு வருகின்றனர். அப்போது தனத்தின் அண்ணன், பிரசாந்த் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான். ஜீவாவும் கதிரும் தான் இப்படி எல்லாம் பண்ணுனாங்கன்னு சொல்லி இருக்கான் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பிறகு வழக்கறிஞர் வந்து ஜாமின் இன்னைக்கு கிடைக்கல என்று சொல்ல, எல்லோரும் அழுது கொண்டு இருக்கின்றனர். அதே தொடர்ந்து ஜீவாவையும், கதிரையும் போலீஸ் கூட்டிக்கொண்டு வெளியே வர, அப்போது முல்லை அழுது கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு அவர்கள் இருவரையும் போலீஸ் ஜிபில் கூட்டிக்கொண்டு போக முல்லையும் தனமும் கோர்ட்டில் அழுது கொண்டே இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து மீனாவின் வீட்டில் மீனாவின் அம்மா மீனாவிடம் அப்பாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நானும் உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் அப்பா உன்னை எவ்வளவு அருமையா வளர்த்தாரு. நீ நடக்க இருந்த கல்யாணத்துல முன்னாடி போயி நின்னு கல்யாணத்தை நிறுத்தி நடந்த பிரச்சனையில உங்க அப்பா எவ்வளவு அவமானப்பட்டு இருந்தாரு தெரியுமா?
ஆனால் எல்லாத்தையும் மன்னிச்சுட்டு தானே அவர் உன் மேலையும் உன் புருஷன் மேலயும் பாசம் காட்டுனாரு. ஆனா உன் புருஷன் ஒரு பெரிய மனுஷனு கூட பார்க்காமல் இப்படி பண்ணிட்டாரு. ஒவ்வொரு முறையும் நீ கஷ்டப்படும்போதெல்லாம் உங்க அப்பா எவ்வளவு கண்ணீர் வடிச்சாரு தெரியுமா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவு அடைகிறது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications