பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு பதில் இவர்.. அதிரடியாக மாறிய கதை! செம சர்ப்ரைஸ் இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து எதிர்பாராத கதைகளம் நடக்க இருக்கிறது. அது குறித்த வீடியோவை இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ஸ்டாலின் முத்து பகிர்ந்து இருக்கிறார். அதேபோல இந்த சீரியலில் முக்கிய பிரபலம் ஒருவரும் மாறி இருக்கிறார். அது யார் என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகம் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தனர்.

ரசிகர்களுக்கு வருத்தம்
அதேபோல இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தொடங்கப்படும் போது பல்வேறு எதிர்பார்ப்புகளும் இருந்தது. ஏற்கனவே அந்த நேரத்தில் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்ட பல சீரியல்கள் ஒரு சில வாரத்திற்குள் இழுத்து மூடும் நிலைமையில் தான் இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி வரவில்லை.
1000 எபிசோடு தாண்டிய சீரியல்
முதல் பாகத்தில் வெற்றி பெற்றாலும் இரண்டாவது பாகம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படாமல் இருந்தது. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் அந்த வரிசையில் இடம் பிடித்து விடுமோ என்று அந்த சீரியலின் ரசிகர்கள் வருத்தத்தோடு இருந்தார்கள். ஆனால் இரண்டாவது பாகமும் ரசிகர்களை கவர்ந்து விட்டது. இந்த சீரியலில் முதல் பாகத்தில் நடித்த ஒரு சிலர் மட்டும் இரண்டாவது பாகத்தில் தொடர்கிறார்கள்.
இரண்டாவது பாகம்
அதேபோல கதைகளம் முதல் பாகத்திற்கு இரண்டாவது பாகத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் முதல் பாகத்தில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் இந்த இரண்டாவது பாகத்தில் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
குடும்ப சண்டை
அதில் அவர் மழையில் நனைந்து ஃபீல் பண்ணி கொண்டிருப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. ஏற்கனவே பாண்டியன் குடும்பத்திற்கும் அவருடைய மனைவி கோமதியின் அண்ணன் குடும்பத்திற்கும் பிரச்சனை தான். இரண்டு குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை. கோமதி பாண்டியனை செய்து கொண்டதால் இன்னமும் அவருடைய அண்ணன்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பாட்ஷாவாக மாறிய பாண்டியன்
அதேபோல பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கோமதியின் அண்ணன் மகன்
குமார் பாண்டியன் மகள் அரசியை காதலிப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதை அரசியும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் இப்போது பாண்டியன் மழையில் நனைந்து பீல் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் சூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன நடக்க போகிறது
இதை பார்க்கும் போது அரசியின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வருமா? அல்லது அரசி குமாரை திருமணம் செய்து விடுவாரா? அதனால்தான் பாண்டியன் எவ்வளவு ஃபீல் பண்ணுகிறாரா என்ற கேள்விகள் வருகிறது. அதனால் இனி வரும் காட்சிகள் பரபரப்பாகவும் சென்டிமென்ட் நிறைந்த விதமாக இருக்கப் போகிறது என்று தெரிகிறது.

இவருக்கு பதில் இவர்
அதுபோல இந்த சீரியலின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது பாகம் புது கூட்டணியில் தொடங்கப்பட்டிருந்த நிலையில் இப்போது முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் டேவிட் மற்றும் ஒளிப்பதிவாளர் முத்துசாமி தான் இந்த சீரியலில் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications