Pandian stores serial: கண்ணன் எங்கே மாமா...கண்ணன் எங்கே ஜீவா...கண்ணன் எங்கேங்க?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகள் ஒற்றுமை மட்டும் இல்லை, இவர்களை திருமணம் செய்துகொண்ட மருமகள்கள் ஒற்றுமையையும் காண்பிக்கிறது.
சின்ன சின்ன வில்லத்தனங்கள் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது என்றாலும், மொத்தமாக இது ஒரு குடும்ப சீரியல். குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளை மட்டுமே கதையாக கொண்டு போகிறார்கள்.
குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் வளர்த்த கடைக்குட்டி கொழுந்தனாரை போலீஸ் கைது செய்துகிட்டு போயிடறாங்க.குடும்பமே அல்லாடிக்கிட்டு இருக்காங்க. இதுதான் இன்றைய மனம் உருக்கும் எபிசோட்.

கண்ணன் கல்லூரி
கல்லூரியில் படிக்கும் கடைக்குட்டி பையன் கண்ணனுக்குத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இன்னும் கல்யாணம் நடக்கலை. அவன் கல்லூரியில் படிச்சுக்கிட்டு இருக்கான். எல்லாத்துக்கும் செல்லப் பிள்ளையாக இருக்கான். இவனை முதல் அண்ணி தனம் வளர்த்த பிள்ளை. மாமியாருக்கு கை கால் வராமல் போயிருந்து. அவங்களை பார்த்துக்கற பொறுப்பும் இந்த மருமகள்களுக்கே வருகிறது.

நெட்டில் படத்தை
ஒரு பெண்ணின் போட்டோவை எடுத்து நெட்டில் விட்டுட்டான் கண்ணன்னு அவன் மேல் பழி விழுது. விளையாட்டுத் தனமாக இருந்த கண்ணனை போலீஸ் வீட்டுக்கே வந்து அரெஸ்ட் பண்ணிக்கிட்டு போயிடறாங்க. வீடே கதி கலங்கி நிற்க. அண்ணன் தம்பிகள் தம்பியை அழைத்து வர விரைந்து போறாங்க. வீட்டில் தனம், மீனா, முல்லை எல்லாரும் கண்ணனை நினைச்சு அழுதுகிட்டே இருக்க, தனம்தான் ரொம்ப உடைஞ்சு போயி அழறா.

அண்ணன் தம்பிகள்
அண்ணன் தம்பிகள் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி கண்ணனை தப்பு செய்யாதவன்னு சொல்லி அழைச்சுட்டு வரோம்னு சொல்லிட்டு போறாங்க. அங்கே போனா, நெட்டில் விட்ட அந்த போட்டோவுக்கு உரிய பெண், ரொம்ப ஸ்ட்ராங்கா கம்ப்ளெயிண்ட் குடுத்து இருக்கு. அதனால விட முடியாதுன்னு போலீஸ் சொல்றாங்க.அது மட்டுமா, அவனை போலீஸ் போட்டு அடிச்சும் விடறாங்க.

சரமாரி கேள்விகள்
கண்ணன் ஒரு பக்கம் நான் தப்பே செய்யலைண்ணா என்னை நம்புங்க.நான் இப்படி செய்வேனா? யாரோ மாட்டி விட்டுட்டாங்க.. என்னை மட்டும் இங்கியே விட்டுட்டு போயிடாதீங்கன்னு கதறி அழறான். ஆனால், போலீஸ் கிளம்புங்க சார் இவனை இப்படியே விட்டுட முடியாதுன்னு சொல்றாங்க.
வீட்டுக்கு வந்தால் கண்ணன் எங்க மாமான்னு தனமும், கண்ணன் எங்க ஜீவான்னு மீனாவும், கண்ணன் எங்கங்கன்னு முல்லையும் ஆளாளுக்கு கேள்வி கேட்கறாங்க. என்ன பதில் சொல்லுவாங்க?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications