பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் "தவறான” முன்னுதாரணம்.. இதை தவிர்த்திருக்கலாம்.. "மோசமான” அந்த காட்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரைக்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனம் இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல கூடாது என்று மீனாவிடம் சத்தியம் வாங்குகிறார்.

இது எவ்வளவு பெரிய தவறான முன்னுதாரணம் என்பது இந்த சீரியல் இயக்குனருக்கும், கதாஆசிரியருக்கும் தெரியவில்லையா? என்று பலரும் திட்டி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டதாக இருந்தாலும் இந்த சீரியலில் மூத்த அண்ணியாக தனம் இருந்து வருகிறார். இவர் தன்னுடைய கொழுந்தன்களை பிள்ளை போல வளர்த்து அவர்களை கல்யாணம் முடித்து வைத்து இப்போது அவர்கள் எல்லோரும் குழந்தையோடு செட்டில் ஆகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியல் தொடங்கி சுமார் 5 வருடங்களுக்கு மேலாக ஆகின்றது. அதனாலேயே இங்கே கதை இல்லாமல் போய்விட்டதோ என்னவோ.? பல நேரங்களில் கதைக்கு சம்பந்தம் இல்லாத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரே அறையில் நான்கு குடும்பத்தினரும் படுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று மருமகள்களும் கர்ப்பமானார்கள். இதைக் குறித்து இப்ப வரைக்கும் ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
அதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி காட்சி தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதை பார்க்கலாம். இதில் இந்த சீரியலில் தியாக சுடராகவும், வீட்டின் தூணாகவும், இருக்கும் தனம் தன்னுடைய குடும்பம் பிரிந்து போய் விடக்கூடாது என்று "தான் மட்டுமே ராஜாங்கம்" செய்து கொண்டு குடும்பத்தை கட்டி காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கர்ப்பமான மூன்று மருமகள்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

ஆரம்பத்தில் தன்னுடைய தம்பிகளுக்காக தான் குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று மூர்த்தியும் தனமும் முடிவெடுத்து இருந்தார்கள். ஆனால் மீனா குழந்தை பெற்றதும் அடுத்ததாக இவர்களும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள். சரி இதுவே கதை திருப்பம் என்று எடுத்துக் கொண்டாலும், இப்போது இரண்டாவது முறையாகவும் தனம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு சில மாதங்களாகவே நெஞ்சுவலி வந்து கொண்டிருந்தது. அதை குறித்து வீட்டில் யாரிடமும் பெருசாக சொல்லாமல் தான் மட்டும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருந்தார்.
இத்தனை நாட்களாக நெஞ்சு வலியை அனுபவித்து வந்த தனம் முல்லை குழந்தை பெற்று வீட்டிற்கு நல்லபடியாக திரும்பி வந்ததும் வலியை தாங்க முடியாமல் நேராக ஹாஸ்பிடல் சென்று டாக்டரிடம் செக்கப் செய்திருக்கும் நிலையில், அவருக்கு நெஞ்சில் கட்டி இருக்கிறது என்று முதலில் கூறி டெஸ்ட் எடுத்துட்டு வர சொல்லி இருக்கிறார்கள். இதை அந்த பக்கமாக மருத்துவமனைக்கு வந்த மீனா கண்டுபிடித்து விடுகிறார்.

அப்போது இதை வீட்டில் சொல்லி விடலாமா என்று மீனா கேட்க, இதை சொன்னா வீட்டுல இருக்கவங்க தாங்க மாட்டாங்க, வேண்டாம் என்று தனம் அப்போதும் மீனாவை தடுத்து விடுகிறார். இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் டெஸ்ட் எடுத்துட்டு ஹாஸ்பிடலுக்கு போகும் நிலையில், அங்கு தனத்திற்கு புற்றுநோயின் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறார் என்று டாக்டர் கூறிவிடுகிறார். அதைத்தொடர்ந்து ஸ்பெஷல் டாக்டரிடம் உங்களுக்கு அப்பாயின்மென்ட் வாங்கி தரேன் நீங்க அவங்களை பாருங்க என்று டாக்டர் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஸ்பெஷல் டாக்டரும் இதற்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்து ஆகணும். அதுவும் சீக்கிரமா செய்யணும், அதுக்கு முன்னாடி குழந்தையை ஆபரேஷன் பண்ணி வெளியே எடுத்துடனும் என்று சொல்லி இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இதை வீட்டில் சொல்லக்கூடாது எனக்கு ஒரு வாரம் டைம் கொடு மீனா எனக்கு முடிக்க வேண்டிய வேலை இருக்கு என்று கேட்டு மீனாவிடம் வீட்டில் சொல்லக்கூடாது என்று தனம் சத்தியம் வாங்கி விடுகிறார்
இதுதான் "மூடநம்பிக்கையின் உச்சம்" கர்ப்பமாக இருக்கும் போது பொதுவாக பெண்களுக்கு எக்ஸ் ரே எடுக்கவே கூடாது என்று கூறுவார்கள். ரொம்பவே தேவைப்பட்டால் மட்டும்தான் ஸ்கேன் கூட எடுப்பார்கள். ஆனால் இவருக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்க்கிறார்கள்.சரி அதுவும் முடியாத பட்சத்திற்கு எடுத்து இருக்கும் என்று சொன்னாலும் கூட நம்பலாம்.
ஆனால் தனம் புற்றுநோயின் இரண்டாவது கட்டத்தில் இருக்கும் நிலையில் குழந்தையும் பாதிக்க கூடாது என்பதற்காக உடனே அதற்கான ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் அதை செய்யப் போவது இல்லையாம். ஒரு வாரம் கழித்து தான் ஆபரேஷனுக்கு தனம் சரி என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே நெஞ்சு வலிக்கும்போது ஆரம்பத்திலேயே இதைப் பார்த்து இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகி இருக்காது. ஆனால் அப்போதும் தவறு செய்துவிட்டு இப்போதும் அதையே தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
உயிரியலில் இங்கே அனுதாபத்தை தேட வேண்டும் என்பதற்காக ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நடத்திவிட்டு அதற்குப் பிறகு ஆர அமர தனத்திற்கு ஆபரேஷன் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள் போல.கர்ப்பமாக இருக்கும் நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண் இந்த மாதிரி ஒரு அபத்தமான காரியத்தை செய்தால் எந்த அளவிற்கு பின்விளைவு வரும் என்பது இந்த சீரியலின் கதா ஆசிரியருக்கு தெரியாதோ என்னவோ.
அதனால்தான் இப்படி எல்லாம் யோசித்து இருக்கிறார். இந்த சீரியலை எத்தனையோ கோடி மக்கள் பார்க்கிறார்கள். அவர்களை எல்லாம் "ஏமாளிகள்" என்று நினைத்து விட்டார்களா? ஏற்கனவே இரண்டு வாரங்களாக இந்த சீரியலில் அழுகாச்சியாகவும், சோக கீதங்களும் தான் பாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இனி ஐஸ்வர்யாவின் வளைகாப்பையும் நடத்தி வைத்து விட்டு அதற்கு பிறகு வீட்டில் சொல்லி அதற்கு பிறகு அவர்கள் ஒரு நாலு வாரத்திற்கு அழுது பிறகு தான் தனத்திற்கு ஆபரேஷன் செய்வார்கள் போல.இது இந்த சீரியலை பார்க்கும் பெண்களுக்கு எந்த அளவிற்கு மன ரீதியாக பிரச்சனையை கொடுக்கும் என்பது இவர்களுக்கு புரியாதா? அதே நேரத்தில் நிஜத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட எத்தனையோ மக்கள் இந்த மாதிரி சீரியல்களை பார்த்து மனம் ஆறுதல் படலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரி சோக கீதங்களை பாடவிட்டு அவர்களை மேலும் கஷ்டப்படுத்த வேண்டுமா?
சீரியலின் டிஆர்பிஐ கூட்ட வேண்டும் என்பதற்காக எத்தனையோ நல்ல வழிகள் இருக்கு. கதை எப்படி எல்லாமோ பயணிக்கலாம் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு அனுதாபத்தின் மூலமாக டிஆர்பி கூட்டலாம் என்று கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதையை நகர்த்திக் கொண்டு வருகிறார்கள். இது குறித்து தற்போது இந்த ப்ரோமோவிற்கும் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பார் போல, அதனால் தான் அவர் அதிக அளவில் வலியோடு ஒரு கமாண்ட் போட்டு இருக்கிறார்.
அதில் அந்த நபர், கேன்சர்.. இதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும். இதன் வலியும் வேதனையும் எல்லாமே பொழுது போக்கா போச்சுல்ல..!? கவலையை மறக்க தான் தொலைக்காட்சி பார்ப்பாங்க. அதிலும் இந்த மாதிரி கஷ்டப்படுத்துறீங்க. நான் என்ன பண்றது தெரியல... சினிமால தான் கேன்சர் வந்தால் செத்து போயிருவாங்க என்று காட்றாங்க. தன்னம்பிக்கை கொடுக்கவில்லை. ஆனால் எல்லோரும் பாக்குற டிவில கூடவா இப்படி பண்ணுவீங்க. இனிமே இந்த சீரியல் பார்க்கிற ஆசையே போயிடுச்சு. இழந்தவர்களுக்கு தான் இழப்பும் வலியும் தெரியும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதுபோல ஒருவர் மட்டும் அல்ல இன்னும் பலர் இந்த மாதிரி கதையை கொண்டு போவதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். புற்றுநோய் பாதித்தால் இப்போதைய சூழ்நிலையில் அது ஒண்ணும் குணப்படுத்த முடியாத நோய் இல்லை என்று கூறி அதற்கு எதிராக சாதித்துக் காட்டினால் அது பார்ப்பவர்களுக்கும் முன்னுதாரணமாகவும், தைரியத்தையும் கொடுக்கும். ஆனால் இந்த மாதிரி அழுகை போட்டு நான் செத்துப் போய்விட்டால் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அர்ப்பதனமான டயலாக்குகளை பேசிக்கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்கப் போவது இல்லை. இனியாவது இதை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்...
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications