பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி இவர் தான் கதாநாயகன்..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் புது சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் வெங்கட் ரங்கநாதன் தான் கதாநாயகன் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த கேரக்டரில் நடிகர் சஞ்சீவ் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் தற்போது அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் ஒரு கேரக்டராக பாண்டியன் ஸ்டோர் ஜீவா இருந்து வருகிறார். இவர் இதுவரைக்கும் நடித்து வந்த பல சீரியல்களில் சைடு கேரக்டரிலும், அண்ணன் தம்பி கேரக்டரிலும் தான் நடித்த வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக அவர் கதாநாயகனாக அவதாரம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் ரங்கநாதன் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். இவருடைய டான்ஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பலருக்கும் பிடித்து போனது தான். அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைக்க தொடங்கினர். அதைத்தொடர்ந்து தான் வெங்கட் ரங்கநாதனுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரோஜா சீரியலிலும் நடித்து வந்தார்.
இரண்டு சீரியலிலும் ஒரே நேரத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என்று அந்த சீரியலை விட்டு விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மட்டும் நடித்து வருகிறார். அதுவும் தற்போது சில மாதங்களாகவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவிற்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். தன்னுடைய மொத்த கோபத்தையும் அண்ணன் தம்பிகளின் மீது கேள்வியாக எழுப்பிய ஜீவாவை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் எனும் சீரியலில் கதாநாயகனாக வெங்கட் ரங்கநாதன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த சீரியலின் சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் வெங்கட் இந்த சீரியலில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதும் செய்தி உறுதியாகி விடும்.
ஏற்கனவே இந்த சீரியலில் சஞ்சீவ் தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அவர் இந்த சீரியலில் நடிக்காமல் விலகி விட்டார் என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. பூஜை போட்ட அன்று கூட கதாநாயகனாக சென்று கலந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அவர் வெளியேறியதற்கான காரணம் இப்ப வரைக்கும் அவர் எதுவும் சொல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது வெங்கட் நடிகர் விஜய்யின் அப்பாவான சந்திரசேகர் உடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications