Zee Tamil: டாப் சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோ.. காரணம் இதுதானா? உருக்கமான போஸ்ட்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் சீரியல் ஆரம்பித்த சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக மாறிவிட்டது. குடும்ப உணர்வுகள், காதல், செண்டிமெண்ட், சண்டை என எல்லாம் கலந்த இந்தக் கதை தினமும் பார்க்கும் ரசிகர்களை ஈர்த்து வந்தது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக விஷால் என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷித் நடித்துக் கொண்டிருந்தார்.
விஷால் கேரக்டர் இந்த சீரியலின் முக்கியமான தூண்களில் ஒன்றாகவே இருந்தது. இந்த சீரியல் தொடக்கத்திலேயே யார் இந்த ஹீரோ என்று தேடல் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அமைதியாகவும், குடும்பத்திற்காக யோசிக்கும் இளைஞராகவும், காதலில் உண்மையானவராகவும் அவர் நடித்த விதம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆலியா மானசாவுடன் அவரின் காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பேசப்பட்டன.

ஹீரோ விலகல்
இப்படி சீரியல் நன்றாக போய்க்கொண்டிருக்கும்போதே, அதிலிருந்து விலகுவதாக ரக்ஷித் திடீரென அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இன்னும் சீரியல் ஓராண்டு கூட ஆகாத நிலையில் ஹீரோ விலகுவது பலருக்கும் ஏமாற்றமாக இருக்கிறது.
கதாநாயகன் போஸ்ட்
விலகியதும் அவர் போட்டிருக்கும் பதிவு தான் எல்லோரையும் நெகிழச் செய்துள்ளது. ரக்ஷித் வெளியிட்ட பதிவில், "விஷால் ஒரு கேரக்டர் மட்டும் இல்ல... என் வாழ்க்கையின் ஒரு பகுதி மாதிரி ஆகிவிட்டார். நான் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் என் மனசு இருந்தது. அந்த அளவுக்கு இந்த பயணம் எனக்கு முக்கியமானது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் தந்த அன்பு தான் ஒரு கலைஞனுக்கு உயிர் என்றும், இந்த அளவுக்கு விஷாலை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் குழு, சேனல் - எல்லோருக்கும் மனமார நன்றி சொல்லியிருக்கிறார்.மேலும், "இது ஒரு முடிவு இல்ல... புதிய தொடக்கம்" என்று அவர் எழுதியிருப்பது, அவர் விரைவில் வேறு ஒரு புதிய வாய்ப்பில் தோன்றப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புரியாத விலகல்
ஆனா ஏன் இந்த திடீர் விலகல் என்ற கேள்விக்கான பதில் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. அதனால் சமூக வலைதளங்களில் பலரும் பல காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புதிய சீரியல், சினிமா வாய்ப்பு, அல்லது கதையில் மாற்றம் - என்ன காரணம் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
விஷால் கேரக்டருக்கு ரொம்ப strong ஆக connect ஆகி இருந்த ரசிகர்கள், "உங்களை மிஸ் பண்ணப்போறோம்", "விஷால் என்றால் நீங்கள்தான்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்போது அனைவரும் காத்திருப்பது - ரக்ஷித்துக்கு பதிலாக விஷால் கேரக்டரில் யார் வரப்போகிறார்? அந்த மாற்றம் கதையில் என்ன தாக்கம் ஏற்படுத்தும்? ஆலியா மானசாவுடன் புதிய ஜோடி எப்படி இருக்கும்? என்பதற்கான பதில்தான்.
ஆலியா மனசாவின் அடுத்த ஜோடி
ஒரு விஷயம் மட்டும் நிச்சயம் - குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஷால் கேரக்டரும், அதை உயிரோட்டமாக நடித்த ரக்ஷித்தும் இந்த சீரியலின் முக்கியமான நினைவாகவே இருக்கும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications