பரிதாபங்கள் கோபிக்கு குழந்தை பிறந்தாச்சு..என்ன குழந்தை தெரியுமா? உருக்கமாக அவர் சொன்ன வார்த்தை
சென்னை: இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சயமானவர்களாகத்தான் பரிதாபங்கள் youtube சேனலின் கோபி மற்றும் சுதாகர் இருந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் ட்ரெண்டிங்கில் இருக்கும் சமூக பிரச்சனைகள் பலவற்றையும் தங்களுடைய காமெடி மூலமாக பலரையும் பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தான் இதில் கோபிக்கு திருமணம் முடிந்தது இந்த நிலையில் இன்று அவருக்கு குழந்தை பிறந்து இருக்கிறது என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் பலருக்கும் பரிட்சயமானவர்தான். 90ஸ் கிட்ஸ்கள் மட்டும் அல்லாமல் 2கே கிட்ஸ்கள் வரைக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.விஜய் டிவியில் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் வாய்ப்புக்காக சென்றிருந்த நிலையில் அவர்களுக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தனியாகவே youtube சேனல் ஒன்றை தொடங்கி தற்போது புது திரைப்படம் தயாரிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
திறமை இருந்தால் எப்போதும் வளர்ச்சி தான் என்பதற்கு இவர்களும் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்காக பேசப்படும் டாபிக் வைத்தும், அதிகமான ரசிகர்களை கவரும் விதத்திலும் இவர்கள் நகைச்சுவையாக வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்றனர்.
பெரிய அளவில் பொருள் செலவு இல்லாமல் ஒரு சின்ன ரூமில் வைத்து, பேக் கிரவுண்டில் பெரியதாக எடிட் செய்யாமல் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வைத்து இவர்களுடைய பேச்சுத் திறமை மற்றும் உடல்
மொழி காரணமாகவே பலரையும் கவர்ந்து கொண்டிருக்கிறனர்.
இவர்கள் எந்த வீடியோ போட்டாலும் அது ரசிகர்களின் மனதை கவர்ந்து அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் நாங்கள் சிங்கிள் பசங்க என்று கெத்தாக வலம் வந்த பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட்டாக இருந்தனர். இந்த நிலையில் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கோபிக்கு கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஏற்கனவே அதற்கு முன்பு சுதாகருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவருடைய காதலியோடு திருமணம் நடந்த நிலையில் அப்போது கோபியை வைத்து அதிகமான மீம்ஸ்களை ரசிகர்கள் போட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து கோபியும் கடந்த செப்டம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணத்தை செய்திருந்தார்.
இந்த நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார். அதில் தகப்பன் ஆனேன்.. அழகிய மகள் பிறந்துள்ளார்.. என ஸ்டேட்டஸ் வைத்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் அதிகமானோர் வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வாதங்களை வழங்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications