புதன்கிழமையும் பத்தாவை நெருங்க முடியாத சிக்மா... வசூலில் இவ்வளவு வித்தியாசமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதியின் பத்தா படமும், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படமும் ஒரே நேரத்தில் தியேட்டரில் இருப்பதால் இரண்டு படங்களின் வசூலும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சிக்மா முதல் நாளில் கொடுத்த வசூல் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அந்த வேகம் அப்படியே தொடரவில்லை. பத்தா படமோ வார நாட்களிலும் ஓரளவுக்கு தனது வசூலை தக்க வைத்துக்கொண்டு வருகிறது. இப்போது நேற்றைய புதன்கிழமை வசூல் நிலவரத்தைப் பார்த்தாலும் இதே நிலைதான் தெரிகிறது.

Vijay Sethupathi Jason Sanjay box office Sigma

பத்தா vs சிக்மா வசூல் நிலவரம்

அக்டோபர் 7-ம் தேதி புதன்கிழமை பத்தா படம் இந்திய அளவில் சுமார் 1.29 கோடி ரூபாய் நெட் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் படத்தின் மொத்த இந்திய நெட் வசூல் 14.04 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சிக்மாவைப் பொறுத்தவரை புதன்கிழமை வசூல் சுமார் 71 லட்சம் ரூபாய் நெட் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் 6 நாட்கள் முடிவில் படத்தின் இந்திய நெட் வசூல் 7.61 கோடி ரூபாயாக இருக்கிறது. நேற்றைய ஒரே நாளில் மட்டும் பத்தா, சிக்மாவைவிட சுமார் 58 லட்சம் ரூபாய் அதிகமாக வசூல் செய்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மொத்த வசூலிலும் பத்தா 14 கோடியை தாண்டிவிட்ட நிலையில், சிக்மா இன்னும் 8 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது 2 படங்களுக்கும் இடையிலான மொத்த நெட் வசூல் வித்தியாசம் சுமார் 6.43 கோடி ரூபாய். சிக்மா படத்திற்கு முதல் நாளிலேயே 2.35 கோடி ரூபாய் நெட் வசூல் கிடைத்தது. அதன்பிறகு சனி, ஞாயிறு தலா 1.50 கோடி அளவுக்கு வசூல் செய்தது. ஆனால் திங்கள் முதல் வசூல் மீண்டும் ஒரு கோடிக்கு கீழே சென்றது. செவ்வாய்க்கிழமை 79 லட்சம் அளவுக்கு வந்த நிலையில், புதன்கிழமை அது 71 லட்சமாக குறைந்திருக்கிறது. இதுதான் சிக்மா படத்தின் வசூலைப் பற்றி இப்போது பேச வைக்கும் விஷயம்.

மாஸ் காட்டும் பத்தா

பத்தாவை எடுத்துக்கொண்டால் முதல் நாள் 1.50 கோடி ரூபாயில் தொடங்கிய படம், சனி, ஞாயிறு நாட்களில் 2.70 கோடி, 2.75 கோடி என்று உயர்ந்தது. திங்கட்கிழமை 1.30 கோடி, செவ்வாய்க்கிழமை 1.40 கோடி என வார நாட்களிலும் ஒரு கோடியை தாண்டிய வசூலை பதிவு செய்தது. புதன்கிழமையிலும் 1.29 கோடி அளவுக்கு வந்திருக்கிறது. இதனால்தான் பத்தா படத்தின் வசூல் தற்போது சிக்மாவுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் வேற மாதிரி தெரிகிறது.

இனிமேல் வரும் நாட்கள் முக்கியம்

இரண்டு படங்களுமே இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனால் இப்போதே எந்த படம் எவ்வளவு லாபம் பார்த்தது, எந்த படம் வெற்றி என்று முடிவு செய்துவிட முடியாது. வசூல் என்பது திரையரங்குகளின் எண்ணிக்கை, காட்சிகள், வார இறுதி வரவேற்பு என பல விஷயங்களைப் பொறுத்து மாறக்கூடியது. ஆனால் தற்போதைய நிலவரத்தை மட்டும் பார்த்தால், சிக்மாவுக்கு முதல் நாளில் இருந்த வேகத்தை மீண்டும் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பத்தாவோ வார நாட்களிலும் ஒரு நிலையான வசூலை கொடுத்து வருகிறது.

குறிப்பாக வரும் வார இறுதியில் 2 படங்களுக்கும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்பதுதான் அடுத்த முக்கியமான விஷயம். முதல் நாளில் சிக்மா கொடுத்த 2.35 கோடி வசூலை பார்த்து ஆரம்பித்த பேச்சு, இப்போது புதன்கிழமை 71 லட்சம் என்ற இடத்திற்கு வந்திருக்கிறது. பத்தாவோ 1.29 கோடியுடன் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

அதனால் இப்போதைக்கு வசூல் போட்டியில் பத்தா முன்னால் இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சிக்மா அடுத்த சில நாட்களில் இந்த இடைவெளியை எப்படி சமாளிக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+