36 வயதில் காலமான பட்டிமன்ற பேச்சாளர்.. கதறி அழுத நடிகர்! பலருக்கு முன் மாதிரியாக இருந்தவருக்கா இந்த நிலைமை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலருக்கும் பட்டிமன்ற பேச்சாளரான ராஜ ஸ்ரீயை தெரிந்திருக்கும். அவருக்கு 36 வயது தான். ஆனால் இன்று அவர் புற்றுநோய் பாதிப்பால் காலமாகி இருக்கிறார். அவருடைய இறந்த செய்தியை கேட்டதும் சோசியல் மீடியாவில் பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 4 வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் பலருக்கு முன் மாதிரியாக மோட்டிவேஷன்கள் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். ஆனால் இன்று அவர் அமைதியாக நித்திரை அடைந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் ராஜ ஸ்ரீ

இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சில வீடியோக்களை பார்க்கும்போது நம்மை அறியாமலேயே நிறுத்தி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று யோசிக்க வைக்கும். அதுபோலத்தான் ராஜ ஸ்ரீயின் வீடியோ இருக்கும். ஆரம்பத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் தனது நண்பர்கள், கணவன், 2 குழந்தைகள், குடும்பத்தினர் என மகிழ்ச்சியாக இருந்த ராஜ ஸ்ரீ வாழ்க்கையில் கடந்த 2022-ம் வருடம் தான் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று ரிசல்ட் வந்திருக்கிறது.

புற்றுநோய் பாதிப்பு

அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக ஆரம்பித்த சமயத்திலேயே அதற்காக பல சிகிச்சைகள் எடுத்திருக்கிறார். ஆனாலும் அவரால் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்திருக்கிறது. அழகாக இருந்த தலை முடிகள் கொட்ட தொடங்கி, முகமும் ஆளை அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறது. பட்டிமன்ற மேடைகளில் கம்பீரமாக பேசிய ராஜ ஸ்ரீக்கு கடைசியில் குரலும் போய்விட்டது. ஆனாலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து மோட்டிவேஷனாகவே வீடியோ வெளியிட்டிருந்தார்.

Rajeshwari health Instagram social media

கடைசி வீடியோ

இந்த புற்றுநோய் பயணத்தில் தான் சந்தித்து கொண்டிருக்கும் வலி, வேதனைகள், குடும்பத்தினர் கொடுக்கும் சந்தோஷங்கள், சப்போர்ட் என எல்லா விஷயங்களையும் பாலோவர்களிடம் பகிர்ந்து வந்தார். இவருடைய வீடியோக்களை பலர் ஷேர் செய்து நீங்கதான் நிஜ சிங்கப்பெண் என்று கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர். 2 குழந்தைகளும் இவரை ஒரு குழந்தை போல கவனித்துக் கொள்வதையும், தன்னுடைய கணவர் தான் 75 கிலோ வெயிட் இருந்தாலும் தன்னைத் தூக்கி குழந்தை போல குளிப்பாட்டி, பாத்ரூம் போக வைத்து தனக்கு சப்போர்ட்டாகவும், தைரியமாக இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ராஜ ஸ்ரீ உருக்கமாக வீடியோவில் பேசி இருந்தார்.

தைரியமான பெண்

பொதுவாக சிலர் கையில் சின்ன குண்டு ஊசி குத்தி விட்டால் கூட அய்யோ அம்மா என்று ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள். ஆனால் ராஜ ஸ்ரீயை ஆரம்பத்தில் பார்த்தவர்களுக்கு அவருடைய கடைசி கட்ட நிலையை பார்த்தாலே பரிதாபம் வந்துவிடும். இப்படி இருந்தும்.. ராஜ ஸ்ரீ தைரியமாகவே வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். நான் இதிலிருந்து மீண்டு வருவேன் என்று மோட்டிவேஷனாகவே பேசிக் கொண்டிருப்பார். அவருடைய குரலில் சத்தமே இல்லாமல் பேசும்போது காத்து மட்டுமே வரும். அப்போதும் கூட மெல்லமாக பேசி தனது வீடியோ பார்க்கும் ஃபாலோவர்ஸ்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்துக் கொண்டிரந்தார்.

Rajeshwari health Instagram social media

கதறி அழுத சீரியல் நடிகர்

ராஜ ஸ்ரீயை பல பிரபலங்களும் பாலோ பண்ணுகிறார்கள். சமீபத்தில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் உட்பட பல சீரியல்களிலும், ஜீ தமிழ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட நடிகர் ராகவேந்திரன் ராஜ ஸ்ரீக்காக ஒரு பாடல் பாடி வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் இன்று அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் அழுதப்படியே ராகவேந்திரன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது வைரலாகி வருகிறது. ராஜ ஸ்ரீ குடும்பத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+