கால் மேல் கால் போட்டு.. பவானி ரெட்டி புக் படிக்கும் அழகே தனிதாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் வந்து இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்த சின்னத்தம்பி சீரியல் கதாநாயகி பவானி ரெட்டி தற்போது சீரியல்கள் எதுவும் கைவசம் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் போட்டோஸ்கள் போட்டு வைரலாகி வருகிறார்.

தற்போது இவர் போட்டிருக்கும் கலக்கல் போட்டோ வேற லெவல் இருக்கிறது. கம்பீரமாக அவர் அமர்ந்து புத்தகம் படிக்கும் அழகை பார்த்து பல ரசிகர்களும் என்ன புத்தகம் என்றும் இவர் உட்கார்ந்து இருக்கும் அழகை இவரை வர்ணித்தும் வருகிறார்கள்.

சின்னத்தம்பி சீரியல் நந்தினி கேரக்டரை இவர் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் .அந்த அளவிற்கு அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

 ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது. கிராமப்புறங்களில் இவருக்கு நல்ல மவுசு அதிகரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் ராசாத்தி சீரியலிலும் கிராமத்து வாழ்க்கையோடு நடித்து விட்டதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியிருந்தது. பவானி ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழில் நடித்திருந்தாலும் தமிழில் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் இவர் நடித்து வந்தார்.

 அழகு

அழகு

அதன்பிறகு விஜய் டிவியில் இரட்டைவால் குருவி என்னும் சீரியலிலும் நடித்திருந்தார் .சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் மிகவும் பண நெருக்கடியில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் போல்டான கேரக்டரில் ஜாலியாக நடித்துக் கொண்டிருந்தார். சின்னத்தம்பி சீரியலில் இவரது நடிப்பு மற்றும் அழகு கேரக்டரை பார்த்து தான் ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு அதிகமாக இருந்தது.

 இவருக்குள் சோகம்

இவருக்குள் சோகம்

அதற்கு பிறகுதான் பல ரசிகர்களும் இவரது நிஜ வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஆனார்கள். அதன் பிறகு இவருடைய வாழ்க்கையில் நடந்த சோகத்தை தெரிந்து கொண்ட பிறகு இவருக்காக ரொம்பவும் ரசிகர்களும் மனவேதனை அடைந்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு கஷ்டமான சூழ்நிலையில் இருந்து தான் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 கல்யாணத்தில் சோகம்

கல்யாணத்தில் சோகம்

மூன்று வருடங்களுக்கு பிறகு இவர்களது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதீப் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு இவருக்கு இவர் மாமனார் மாமியார் சைடில் இருந்து ஏகப்பட்ட பிரச்சினைகளை கொடுத்திருக்கிறார்கள்.

 கணவரால் கஷ்டம்

கணவரால் கஷ்டம்

எல்லாமே இவர் பேஸ் பண்ணி தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார். இவர் அவர் தற்கொலை செய்தற்கான காரணத்தையும் வெளிப்படையாக அனைவரிடம் கூறியிருக்கிறார். சூட்டிங் போயிட்டு வந்ததும் இருவரும் இணைந்து பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்கள். கொண்டாடிக்கொண்டிருக்கும் போது எனக்கு டயர்டாக இருக்கிறது நான் மேலே சென்று தூங்க போகிறேன் என்று சொல்லிவிட்டு அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருக்கிறார்.

 கணவருடன் தகராறு

கணவருடன் தகராறு

பின்பு அவர் குடித்துவிட்டு பவானி இடம் பேச வரும்போது பவானி எனக்கு வேலை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் சண்டை வந்து இருக்கிறது .அதனால் கோபப்பட்டுக் கொண்டு பவானி குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொள்ளவும் பிரதீப் கிளாசை உடைத்திருக்கிறார் அதில் அவரது கையில் குத்தி ரத்தம் வழிந்து இருக்கிறது. அதை பார்த்த பவானியின் தம்பி அவருக்கு கட்டுப்போட்டு விட்டிருக்கிறார். அதன்பிறகு இருவரும் தனி தனி ரூமில் போய் தூங்கியிருக்கிறார்கள்.

 கணவரின் தற்கொலை

கணவரின் தற்கொலை

காலை நான்கு முப்பது மணிக்கு பவானி சென்று பிரதீப்பை பார்க்கும்போது அவர் தூக்கு போட்ட நிலையில் இருந்திருக்கிறார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் சென்றிருக்கிறார்கள் அங்கு அவர் இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் அடிக்கடி இந்த மாதிரி சண்டைகள் வருவது சகஜம்தான். ஆனால் இந்த சின்ன பிரச்சனைக்கு இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று பவானி கூறியிருக்கிறார்.

 தலை கொள்ளா பிரச்சினை

தலை கொள்ளா பிரச்சினை

இதனை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளாத பிரதீப் பெற்றோர் இவர் மீது போலீசில் புகார் கொடுத்து இவர் லைபில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் அதிலிருந்து மீண்டு தான் இந்த சீரியல்களில் இவர் நடித்து தனது கவனத்தை மாற்றி வந்தார். தற்போது இவருக்கு இவரது வீட்டில் இரண்டாவது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இவர் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம்.

 ரசிகர்கள் புடை சூழ

ரசிகர்கள் புடை சூழ

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தலைகீழாக நின்று டிஷர்ட்டை போடும் வீடியோ இவர் வெளியிட்டு அது வைரலாக பரவி வந்தது .அதன் பிறகு குளியல் அறையில் உட்கார்ந்து மது அருந்துவது போலவும் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் கதிகலங்க வைத்து இருந்தார். தற்போது படுக்கை அறையில் புத்தகம் வாசிப்பது போல உட்கார்ந்து இருக்கிறார் அது என்ன புத்தகம் என்று கேட்டு பல ரசிகர்களும் இவரை நச்சரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+