ரசிகர்களின் பலநாள் கேள்வியை திரிஷாவிடம் நேரடியாக கேட்ட பிரபலம்.. பதில் தான் அல்டிமேட்
சென்னை: தமிழ் சினிமாவில் 20 வருஷத்துக்கு மேலாக முன்னணி நடிகையாகவே தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் திரிஷாவை பற்றி ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு கேள்வி இருந்தது. சினிமாவுக்கு வரமாட்டேன்னு சொன்ன திரிஷா எப்படி நடிகையாக மாறினார்? என்பதுதான். இந்த கேள்வி பல வருஷத்துக்கு முன்பே தொகுப்பாளினி பெப்சி உமா தன்னுடைய நிகழ்ச்சியில் திரிஷாவிடம் நேருக்கு நேர் கேட்டிருக்கிறார். அந்த வீடியோ இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷா பெப்சி உமா பேட்டி
அதாவது நிகழ்ச்சியில் பெப்சி உமா திரிஷாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்க பல பேட்டிகளில் சினிமாவுக்கு வரமாட்டேன் என்று சொல்லியிருந்தீங்க... ஆனால் இன்று சினிமாவில் இருக்கீங்க? இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்கிறார். இந்த கேள்வியை கேட்டதும் ஒரு நொடி சிரித்துக்கொண்ட திரிஷா எந்த தயக்கமும் இல்லாமல், ஆமாம் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்று பல முறை சொல்லி இருக்கிறேன்.
அதற்காக இப்போது நிறைய பேர் என்னை கிண்டல் பண்ணுவாங்க. ஆனால் அப்போ எனக்கு வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவில்ல.. படிப்பை தொடரலாமா? சினிமாவுக்கு வரலாமா? என்ற குழப்பத்தில் இருந்து பிறகு முதலில் படிப்பை முடித்துவிட்டு பிறகு முடிவெடுக்கலாம் என்று நினைத்தேன். சினிமாவில் ஆர்வம் இல்லாததால் அப்படி சொன்னது இல்லை என்று கூறி இருக்கிறார்.

சினிமாவுக்கு வந்த காரணம்
திரிஷா இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது சின்ன சின்ன கேரக்டரில் தான் நடித்து வந்தார். மாடலிங் மூலமாகத்தான் அவருக்கு பிரபலம் கிடைத்தது. அந்த நேரத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிஷாவிடம் தொகுப்பாளர் யோகி கூட சினிமாவுக்கு வருவீங்களா என்று கேட்டிருந்தார்.
திரிஷாவின் விளக்கம்
அப்போது நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்று திரிஷா சொல்லி இருந்தார். ஆனால் வாழ்க்கை அவருக்கு வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுத்து வைத்திருந்தது. இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் திரிஷாவின் ஆரம்பப் பயணம் 1999 இல் மிஸ் சென்னை பட்டம் வெற்ற பிறகு தான் தொடங்கியது. அப்போது விளம்பரங்கள் மாடலிங் எனது பயணத்தை தொடங்கினார்.
திரிஷாவின் ஆரம்பகாலம்
பிறகு சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நிலையில் இனி ஒரு படம் பார்ப்போம். அது ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டு போய்விடலாம் என்று நினைத்திருந்ததாக திரிஷா சொல்லி இருந்தார். ஆனால் திரிஷாவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது சாமி படம் தான். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. அதற்குப் பிறகு கில்லி, திருப்பாச்சி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன், லியோ, கருப்பு என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்த அவர் இன்று தென்னிந்தியா சினிமாவில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராகத் தான் இருக்கிறார்.
சிம்பு எப்படிப்பட்டவர் தெரியுமா? உண்மையான கேரக்டர் இதுதான்! ஓபனாக பேசிய பெப்சி உமா
சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படமும் வசூலில் 300 கோடியை கடந்த நிலையில் திரிஷா ராசி இன்னும் குறையவில்லை என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள். திரிஷா பற்றி எப்போதுமே சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வரும் நிலையில் இப்போது அவர் பல வருஷங்களுக்கு முன்பு பேசிய பேட்டியை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
