மீண்டும் வருகிறேன், பெப்சி உமா கொடுத்த அப்டேட்.. சின்னத்திரையில் இனி கொண்டாட்டம் தான்
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளர் பெப்சி உமா மீண்டும் தான் வரப்போகிறேன் என கூறியிருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெப்சி உமா பல தகவல்களை கூறி இருக்கிறார்.
தொகுப்பாளராக மீண்டும் அறிமுகமாகும் பெப்சி உமாவிற்காக இப்போது ரசிகர்கள் காத்திருக்க தொடங்கி விட்டார்கள்.
பொதுவாக நடிகர் நடிகைகள் என்றால் கூட அவர்கள் நடித்து பிரபலம் அடைந்த திரைப்படத்தின் பெயர்கள் தான் அவர்களுக்கு அடைமொழியாக வைப்பார்கள். ஆனால் 90ஸ் காலகட்டத்திலேயே தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் ஒரு விளம்பரதாரரின் பெயரை அடைமொழியாக கொண்டவர்தான் பெப்சி உமா.

தற்போதைய சூழ்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக நயன்தாரா அழைக்கப்பட்டாலும் அந்த காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அதற்கு பொருத்தமானவர் பெப்சி உமா தான். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளர்களில் இவர் முதன்மையானவர். பல தொகுப்பாளர்கள் வந்திருந்தாலும் இவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று ரசிகர்கள் இப்பவும் கூறி வருகிறார்கள்.
கமலுக்கு நோ சொன்ன பெப்சி உமா.. ரஜினிகாந்த் கேட்ட கேள்வி.. தற்போது நிலைமை இப்படியா?
தொடர்ந்து 15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பெப்சி உமா அதைத்தொடர்ந்து இப்போது சில வருடங்களாக சின்னத்திரையை விட்டு விலகி இருந்து வருகிறார். இவருக்கு ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அதுவெல்லாம் எனக்கு வேண்டாம் எனக்கு சின்னத்திரையே போதும் என்று இவர் உறுதியாக கூறி இருக்கிறார்.
கதாநாயகிகளுக்கு இணையாக அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரே தொகுப்பாளர் என்றால் அது பெப்சி உமா தான் என்று இப்போதும் 90 கிட்ஸ்கள் பலர் கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய தெள்ளத் தெளிவான தமிழ் பேச்சு மற்றும் சிரித்த முகம் அவருடைய உடை அழகு பலரும் மெச்சித்தக்க வகையில் இருந்து வருகிறது. இந்த வகையில் இவர் பல வருடங்களாக காணவில்லையே எங்கே போனார் என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெப்சி உமா கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வீடியோவில் மீண்டும் நான் விரைவில் சின்னத்திரைக்கு வரப்போகிறேன் என்று அப்டேட் கொடுத்திருக்கிறார். இது 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தற்போது இந்த வீடியோவை அதிகமான ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications