மருமகளை தொடர்ந்து மகனுக்கு வாழ்த்து.. “என் உயிர் நாடி” என பூர்ணிமா உருக்கம்.. ராதிகா கொடுத்த கமெண்ட்
சென்னை: நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தன்னுடைய மகன் குறித்து நெகிழ்ச்சியோடு ஒரு பதிவு வெளியிட்டிருந்த நிலையில் அது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. தன்னுடைய மகன் பற்றி பூர்ணிமா போட்ட பதிவுக்கு நடிகை ராதிகா, கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுவும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் 1980 ஆம் ஆண்டு முதல் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் நடிகர் பாக்யராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதிக்கு சரண்யா மற்றும் சாந்தனு என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சாந்தனு பிரபல நடிகராக இப்ப வரைக்கும் இருந்து வருகிறார். ஆனால் சரண்யா ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு சரண்யா காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி எடுத்து இருந்த நிலையில் அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு இப்போது தன்னுடைய பழைய நிலைக்கு மாறியிருக்கும் சரண்யா பிசினஸ் செய்து பல பெண்களுக்கு முன் மாதிரியாக பிசினஸில் அசத்தி கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடங்கிய பூர்ணிமா பாக்யராஜ் இப்போது தமிழ் சினிமாவில் அம்மா மற்றும் மாமியார் போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
பூர்ணிமா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல பாக்கியராஜ் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய இயக்குனராக இருந்தாலும் இப்போது அதிகமாக திரைப்படங்களை இயக்கவில்லை. நடித்து மட்டும் கொண்டிருக்கிறார். அவர் இயக்குனர் மற்றும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருடைய வீட்டில் வாய்ப்புக்காகவும் கதை சொல்வதற்காகவும் பல கிலோமீட்டர்க்கு வரிசையில் பலர் நின்று கொண்டிருப்பதாக சிலர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பாக்கியராஜ் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கெஸ்ட் ஆக கலந்து கொள்கிறார். அதேபோல பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமாவின் மகன் சாந்தனு சின்னத்திரை தொகுப்பாளரான கீர்த்தி என்ற கிகியை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். சாந்தனு தான் காதலிக்கும் விஷயத்தை தன்னுடைய தந்தை பாக்யராஜிடம் சொன்னதும் அவர் நேரடியாக கிகி வீட்டில் சென்று பெண் கேட்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு தான் இவர்களின் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு எல்லோரும் கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கீர்த்தியின் பிறந்தநாளுக்கு அவருடைய மாமியாரான பூர்ணிமா பாக்கியராஜ் "எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி தந்ததற்கு ரொம்ப நன்றி" என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதுபோல பூர்ணிமா எந்த பேட்டிகளிலும் பேசும்போதும் தன்னுடைய மருமகள் குறித்து அவள் என்னுடைய மகள் தான் என்னுடைய மகனை மொத்தமாக மாற்றி இருக்கிறார் எங்கள் வீட்டில் செல்ல பெண் என்று பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் பூர்ணிமா இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சாந்தனுவின் சிறுவயது முதல் இப்போது வரை உள்ள பல புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், "சில சமயங்களில் என் தந்தையை போலவே நடந்து கொள்ளும் என்னுடைய உயிர் நாடி... எனக்கு அறிவுரை கூறுவது, என்னை நேசிப்பது என்னுடைய சோனு (சாந்தனு)தான் என்று சாந்தனுவிற்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பூர்ணிமா தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ராதிகா சரத்குமார், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தனு.. உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த கமெண்டுக்கு அதிகமான லைக்குகள் வருகிறது. அதுபோல தன்னுடைய அம்மாவின் வாழ்த்துக்கு சாந்தனு நன்றி தெரிவித்திருக்கிறார்.

-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications