என் பொண்ணு இப்போ பைலட்டா இருக்காங்க, பூவே உனக்காக பட நடிகை சங்கீதா சொன்ன விஷயம்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமான நடிகை சங்கீதா அந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தன்னுடைய மகள் இப்போது பைலட்டாக இருப்பதாக சங்கீதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை சங்கீதா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இவருடைய அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆடிஷனுக்கு வந்தபோது இவரும் ஸ்கூலை கட்டடித்து விட்டு துணைக்கு வந்திருக்கிறார். அப்போது தான் படத்தில் நடிக்க செலக்ட் ஆகி இருந்தாராம். அப்போதிலிருந்து இவருடைய சினிமா பயணம் தொடங்கியது.

பூவே உனக்காக பட நடிகை
ஆனாலும் 16 வயதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக "எல்லாமே என் ராசாதான்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு கிராமப்புற மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தையும், பிரபலத்தையும் கொடுத்தது. அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல பிரபலத்தை வாங்கி கொடுத்தது.
சர்ச்சை
அந்த திரைப்படம் தான் அவருடைய குடும்ப வாழ்க்கையை மாற்றி அமைத்தது. பூவே உனக்காக திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணனை சங்கீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் நடிகர் விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவை காதலித்து வந்தார். இந்த தகவல் வெளியான போது பலரும் சங்கீதா என்றதுமே பூவே உனக்காக பட நடிகையை தான் விஜய் காதலிக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டனர். இது குறித்து சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் சங்கீதா விளக்கம் கொடுத்திருந்தார்.

காதல் திருமணம்
நான் காதலிக்கும் விஷயம் விஜய் சாருக்கு தெரியும், அது போல அவரும் அவருடைய காதல் விஷயத்தை என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் எங்களை பற்றி தவறாக செய்திகள் பரவி வந்தது. ஆனால் நாங்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்று சங்கீதா கூறியிருந்தார். அதுபோல சங்கீதா- சரவணன் தம்பதிக்கு ஒரு மகள் மட்டும் இருக்கிறார். அவர் பற்றி இப்போது பேட்டி ஒன்றில் சங்கீதா பேசிய தகவல் தான் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
நடிகை சங்கீதாவின் மகள்
சங்கீதா திருமணத்திற்கு பிறகு பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இவர் எங்கே போனார் என்று பலரும் தேடி வந்த நிலையில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு பங்ஷனில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இவரைப் பற்றி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேச வைத்தது. நடிகர் விஜயை தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பல வருடங்களாக தன்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் தன் குழந்தை பிறந்த பிறகு திருப்பாச்சி படத்தின் சமயத்தில்தான் என்னுடைய மகளை அழைத்துக் கொண்டு விஜயை பார்க்க சென்று இருந்தேன் என்று விஜய் குறித்து சங்கீதா பேசுகின்றார்.
நடிகை சங்கீதாவின் ஆசை
ஆனால் இப்போது சங்கீதாவின் மகளுக்கு 24 வயது ஆகிறதாம் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பைலட்டாக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சங்கீதாவிற்கு தன்னுடைய மகளை பைலட் ஆக்க வேண்டுமா என்று கேள்வி இருந்ததாம். ஆனாலும் பள்ளி படிப்பை எல்லாம் முடித்துவிட்டு பைலட் ஆவதற்காக ஃப்ளோரிடாவில் படிப்பை தொடங்கி இருக்கிறார். அங்கு பயிற்சிகளை எடுத்துக்கொண்டு படிப்பை முடித்ததும் சென்னை திரும்பி இருக்கிறார். இப்போது இந்தியாவுக்குள் பைலட்டாக பிளைட் ஓட்டிக் கொண்டிருக்கிறார். சங்கீதா தன்னுடைய மகள் ஓட்டும் பிளைட்டில் எப்பவாவது ஒருமுறை பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு!












Click it and Unblock the Notifications