பவுர்ணமி பாப்பா ராசி இல்லாதவளா... மகளை பார்வையால் வெறுக்கும் அப்பா!
Recommended Video

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் பவுர்ணமி சீரியல், தாயை இழந்த சிறுமி தந்தையின் அன்புக்காக ஏங்கித் தவிக்கும் அவலநிலை..., கண்முன் வந்தாலே கண் குருடாகிவிடும்னு சொல்ற அளவுக்கு அவளை பார்க்கவே பிடிக்காத தந்தை என்று தினம் தினம் மனச்சுமையை உண்டாக்குவதா இருக்கு.
பெண் குழந்தைகளை பெற்று விட்டாலே இரட்டிப்பு கவனத்துடன் தாய் தந்தை அவளை வளர்க்க வேண்டும் என்கிற சூழலில், சித்தி, பாட்டியின் அரவணைப்பில் மட்டுமே வளரும் பவுர்ணமி பாப்பா, படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியா இருக்கா.

பள்ளியில ஆண்டுவிழா.. பிள்ளைங்க அவங்கவங்க அப்பா அம்மாவோடுதான் வரணும்னு பள்ளிக்கூடத்துல சொல்ல, அப்பாதான் வர மாட்டேரே...சித்தியும் பாட்டியும் வரேன்னு கிளம்பறாங்க.
சக்ரவர்த்தி அதாங்க பவுர்ணமியின் அப்பாவுக்கு திடீர்னு ஒரு அழைப்பு வருது. மனைவியையும் அதாவது பவுர்ணமி சித்தியையும் உடன் வர சொல்லி அழைக்கிறான்.அவளும் சொல்ல முடியாமல் கணவனுடன் கிளம்பு, பவுர்ணமி பாப்பாவுடன் பாட்டி மட்டுமே போறாங்க.

கடைசியில பார்த்தா பவுர்ணமி படிக்கற ஸ்கூலுக்குத்தான் சக்ரவர்த்தியை ஸ்பெஷல் கெஸ்ட்டா இன்வைட் பண்ணி இருக்காங்க. சித்தி, தவித்து நிற்க... பிள்ளைகள் சக்ரவர்த்தி கையால் பரிசு வாங்கறாங்க.
இந்த சமயத்துலதாங்க... மொத்த ஸ்கூல்லயும் பெஸ்ட் ஸ்டூடன்ட், பெ ஸ்ட் பிளேயர்னு பவுர்ணமிக்கு பரிசு குடுக்க அழைக்கறாங்க. அதிர்ந்து போகிறான் சக்ரவர்த்தி. இந்த ராசி இல்லாதவளுக்கு என் கையால பரிசு கொடுத்து அந்த பாவத்தை எப்படி போக்குவேன்னு மைண்ட் வாய்ஸ்.

பவுர்ணமி மேடையில் வந்து நிற்க, அவள் முகத்தில் சந்தோஷம், குழப்பம், பயம் என்று மாறி மாறி வந்து போகிறது.இதற்கிடையில் சக்ரவர்த்தி நெஞ்சுவலியால் துடித்து சாய்கிறான்.

மனைவியும், தாயும் பதறி ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்துப் போக, வழியில் நிறுத்த சொல்லி இறங்கிய சக்ரவர்த்தி, வில்லன் சக்ரவர்த்தி போல சிரிக்கிறான். நம்பிட்டீங்களா, அவளுக்கு என் கையில பரிசு குடுத்துட்டு, நான் வீணா போறதா,? அவ கூட போஸ் குடுத்து நான் போட்டோ எடுத்துக்கிட்டா வெளங்கிரும்னு வசனம் பேசறான்.
அசந்து நிற்கிறார்கள் மனைவியும், தாயும்... அவர்களும் பெண்தானே
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications