வனிதா மீது தாக்குதல்.. வருத்தம் தெரிவித்தார் பிரதீப் ஆண்டனி.. வாட்ஸ் ஆப் உரையாடலை பார்த்தீர்களா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தனது ஆதரவாளரால் தாக்கப்பட்டதை அறிந்த பிரதீப் ஆண்டனி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அசைக்க முடியாத போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர் நிறைய கெட்ட வார்த்தைகளை பேசினாலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். ஏனென்றால் அவர் நியாயமாக நடந்து கொண்டார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

அவர் எதிர்க்கும் விஷயங்களில் எல்லாம் நிச்சயம் ஒரு நியாயம் இருக்கும் என நம்புகிறார்கள். இவர் நிச்சயம் இறுதி போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சக போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதற்கு கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தீர விசாரிக்காமல் ஒரு டஃப் கன்டெஸ்டென்ட்டுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ரெட் கார்டு விவகாரத்திற்கு விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்டோரே எதிர்த்தனர். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரிவ்யூ கொடுத்து வருகிறார்.
அவர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது சரியே என்பதை போல் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கமல்ஹாசன் கலந்து கொண்ட பிக்பாஸ் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்துள்ளார் வனிதா. அப்போது யாரோ ஒருவர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்குறதுக்கு ஆதரிக்கிறியா என கேட்டவாறே முகத்தில் குத்தியுள்ளார்.
என்னவென புரியாமல் தவித்த வனிதாவின் முகம் வீங்கிவிட்டது. ரத்தம் வழிந்தது. உடனடியாக தகவலறிந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி செய்து அனுப்பி வைத்தனர். இதற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் வனிதா தான் குத்துப்பட்ட போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
முகம் வீங்கி, ரத்தம் கட்டியுள்ளது, கண் திறக்க முடியாதபடி வீங்கியுள்ளது. இதற்கு வனிதா தனது பதிவில், பிக்பாஸ் செட்டை விட்டு வெளியே வந்த போது இருட்டாக இருந்தது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. யார் என்னை தாக்கினார்கள் என்று கூட தெரியவில்லை. இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி, வெறுப்பை பரப்பாதீர்கள், அன்பை பகிருங்கள்.
எனக்கு வலி இருக்கிறது. நான் ஓய்வு எடுக்க வேண்டும். என்னை யாரும் தொல்லை செய்யாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். வனிதா மர்ம நபர் மீது புகாரும் அளித்துள்ளார். இந்த நிலையில் வனிதா மீதான தாக்குதலுக்கு பிரதீப் ஆண்டனி வருத்தம் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். ஆனால் பின்னர் அதை டெலிட்டும் செய்துவிட்டார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸில் எந்த போட்டியாளர்களுக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ நான் இல்லை. நான் இப்படித்தான் அவர்களுடன் பேசுகிறேன். வனிதா விஜயகுமார் உங்களுக்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஓய்வு எடுங்கள்.
ஜோவிகா மிகவும் புத்திசாலி. அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெல்ல முடியும். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை என பதிவிட்டிருந்தார். அது போல் வனிதா விஜயகுமாருடனான தனது வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை பிரதீப் டெலிட் செய்துவிட்டார். நவம்பர் 5 ஆம் தேதி இருவருக்கும் நடந்த உரையாடலை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் "ஹாய் வனிதா, எனது மனம் நிலையாக இல்லை என்ற முடிவில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்கள் மகளுக்கு எதிரானவர் அல்ல. கவலை வேண்டாம். ரெட் கார்டு விவகாரத்தில் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது. தகவல்களை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன். நான் சில சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன். இப்போது பேசினால் அது பாதுகாப்பாக இருக்கும் என நான் நினைக்கவில்லை, ஷோ முடியட்டும். நான் பேசுகிறேன். உங்களுக்கு எனது அன்பு என தெரிவித்துள்ளார்.
இதற்கு வனிதா அளித்த மெசேஜில், எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் கேம் பிளான் உள்ளிட்டவை குறித்து நான் உண்மையில் உங்களுடன் பேச வேண்டும். உங்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். நிகழ்ச்சியில் என்ன ஒளிபரப்பப்பட்டதோ அதைதான் நாங்கள் பார்த்தோம். உங்களுடைய நண்பராக நான் உங்களிடம் பேச வேண்டும். இதுதான் எனது போன் நம்பர். உங்களுக்காக நான் இருக்கிறேன். உங்களுக்கு நடந்த கசப்பான விஷயங்களுக்கு எனது அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications