கனா காணும் காலங்கள் சீரியல் "ஜோ” செய்த செயல்.. மறக்க முடியாத சம்பவம்! உருக்கமாக பேசிய பிரதீப் ரங்கநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு தலைமுறையையே கவர்ந்த சீரியல்களில் முக்கியமானது கனா காணும் காலங்கள். பள்ளி வாழ்க்கை, நட்பு, காதல், கனவுகள்-இந்த எல்லாத்தையும் மிகவும் இயல்பாக காட்டிய அந்த சீரியல் இன்றைக்கும் பலரின் நினைவில் இருக்கிறது. குறிப்பாக 'ஜோ' என்ற கதாபாத்திரம், அந்த காலத்து இளைஞர்களுக்கு ஒரு விதமான கனவு ஹீரோவாகவே இருந்தது.

அந்த 'ஜோ'வை இப்போது மீண்டும் பேச வைக்க காரணமாக இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு அனுபவம், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Pradeep Ranganathan Kana Kaanum Kaalangal

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, பிரதீப் ரங்கநாதன் தனது பள்ளி நாட்களையும், அந்த காலத்தில் தன்னை பாதித்த மனிதர்களையும் நினைவு கூர்ந்தார்.

"நான் ஸ்கூலில் படிக்கும்போது 'கனா காணும் காலங்கள்' ரொம்ப ஹிட். அந்த சீரியலில் 'ஜோ' கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாங்க எல்லாருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் மாதிரி தான் இருந்தார்," என்று ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவர் சொன்ன அனுபவம்தான் பலரையும் நெகிழ வைத்தது.

வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றம்

ஒரு நாள், எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்ற ஆசையுடன் பிரதீப் சென்றிருக்கிறார். ஒரு ரெஸ்டாரண்டில் சூர்யா அமர்ந்திருந்தாராம். அவரை பார்த்து காத்திருந்து, தைரியம் செய்து பேசினார்.

"சார், உங்களிடம் அசிஸ்டென்ட்டா சேரணும்" என்று கேட்டதற்கு, "ப்ரொஃபைல் கொடுத்து போங்க... பார்த்துட்டு சொல்லுறேன்" என்று சாதாரணமாக பதில் கிடைத்தது.

அந்த பதில் பெரிய மறுப்பு இல்லாதபோதும், பிரதீப்புக்கு அது ஒரு ஏமாற்றமாக இருந்தது. மனசு உடைந்து கீழே இறங்கி வந்திருக்கிறார். அப்படியே அந்த நேரத்தில் தான், 'ஜோ' கதாபாத்திரத்தில் நடித்த யுதன் அங்கே வந்திருக்கிறார்.

பெரிய மாற்றம்

அவர் என்ன பேசினார் என்பது இன்றைக்கும் பிரதீப்புக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் அந்த சில நிமிட உரையாடல் அவரை மீண்டும் எழுந்து நிற்க வைத்ததாம்.

"நான் உடைந்து இருந்த நேரத்தில் அவர் நல்லவிதமா பேசினார்... என்ன பேசினார்னு இப்போ நினைவுக்கு வரல... ஆனா அது எனக்கு ஒரு பெரிய பூஸ்ட் மாதிரி இருந்தது," என்று பிரதீப் உருக்கமாக பேசியிருக்கிறார் ‌.

அந்த ஒரு தருணத்துக்குப் பிறகு தான் அவர் விடாமுயற்சியுடன் வேலை செய்ய ஆரம்பித்ததாகவும், இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இன்று டாப் லெவலில் இருக்கும் பிரதீப்

இப்போது பிரதீப் ரங்கநாதன், இளம் தலைமுறையின் ஃபேவரிட் ஹீரோவாகவே மாறியிருக்கிறார். அவர் இயக்கி நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. குறிப்பாக 'லவ் டுடே' படம் வெளியான பிறகு, 2K கிட்ஸ்களின் மனதில் அவர் ஒரு ஸ்பெஷல் இடம் பிடித்தார். இப்போது தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதிப் தன்னை பற்றி பேசிய வீடியோக்களை ஷேர் செய்த யுதன் அதற்கு நன்றி சொல்லி இருக்கிறார். இப்போதும் என்னை எல்லோரும் நினைவில் வைத்திருப்பதற்கு ரொம்ப சந்தோஷம் என்றும் அவர் பேசியிருக்கிறார். ஆனால் யுதன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று பலரும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.

"ஜோ" இப்போது எங்கே?

'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடித்த "ஜோ" கதாபாத்திர நடிகர் யுதன், அந்த சீரியலுக்குப் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அதிலும் காதல் சொல்ல வந்தேன் பட்டாளம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால், மெதுவாக திரையுலகில் இருந்து பின்வாங்கி விட்டார். இன்று பிரதீப் வளர்ந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்கிறார்கள்... அதே நேரத்தில், அந்த 'ஜோ' மீண்டும் திரையில் வரணும் என்ற எதிர்பார்ப்பும் அமைதியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+