கேப்டனை போலவே மகன்களும் ஆசைப்பட்டு விட்டார்கள்.. உருகிய பிரேமலதா விஜயகாந்த்.. ஏஆர் முருகதாஸ் உடைத்த ரகசியம்
சென்னை: விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மே 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் போன்ற பலர் கலந்து கொண்டனர். அப்போது பிரேமலதா தன்னுடைய கணவர் விஜயகாந்தை போலவே என்னுடைய மகன்களும் ஆசைப்பட்டனர் நான் அவர்களுக்கு ஆசைக்கு சம்மதம் சொல்லிவிட்டேன் என்று பேசி இருந்தார்.
தன் மகனுக்காக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா நான் அரசியல் மேடை இல்லாமல் சினிமா சார்ந்த மேடையில் பேசுவது இதுதான் முதல் முறை என்று தன்னுடைய பேச்சை தொடங்கி இருந்தார். அதற்கு பிறகு அவர் பேசும்போது விஜயகாந்த் இரு தொழில்களில் இருந்தார், அரசியல் மற்றும் சினிமா. அவரின் வழியில் அவருடைய இரண்டு மகன்களும் செல்கிறார்கள். அவர்கள் இருவரும் பிறந்த போதே இதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.

மகன்கள் பற்றி பெருமிதம்
நிச்சயம் கேப்டனின் இலக்குகளை அவரது மகன்களும் நிறைவேற்றுவார்கள். விஜயகாந்த் போல என்னுடைய மகன் சண்முக பாண்டியன் எல்லோருக்கும் உதவி செய்கிறார். அதேபோல சினிமாவிலும் உச்ச நட்சத்திரமாக ஆனாலும் அவர் தொடர்ந்து இதை செய்வார் என்று கூறுகிறேன். கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் நடிக்கும் போது கேப்டனோடு நெருங்கி பழகிய யானையை வீட்டிற்கு அழைத்து வரவா என்று கேட்டார்.
பிரேமலதா உறுதி
அப்போது நான் நம்ம வீடு அவ்வளவு பெருசு இல்லை என்று சொல்லி இருந்தேன். அதுபோல சண்முக பாண்டியனும் இப்போது மணியன் யானையை வீட்டுக்கு அழைத்து வரவா என்று கேட்கிறார். இருவரும் யானைகளை வளர்க்கவே விரும்புகிறார்கள். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் பேசும்போது விஜயகாந்த் குறித்து பல விஷயங்களை நெகிழ்ச்சி உடன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஏ ஆர் முருகதாஸ் பேட்டி
தான் ஆரம்பத்தில் சினிமாவை ரசிக்க தொடங்கியதே விஜயகாந்த் பார்த்து தான், அவருடைய ரசிகர் நான். அவருடைய படங்களை 50 முறைக்கு மேலே பார்த்திருக்கிறேன். அவருடைய ஆபீஸில் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக போகும்போது எனக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்தாங்க, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படி எல்லாம் யாரும் செய்ய மாட்டாங்களே என்று யோசித்தேன். எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த எல்லோருக்குமே ஹார்லிக்ஸ் தான் கொடுத்துக் கொண்டிருந்தாங்க.
எல்லோரும் ஒரே உயிர்
எல்லோரும் விஜயகாந்த் சார் சாப்பாடு போடுவாங்கன்னு சொல்லி இருக்காங்க நானும் கண்ணால் பார்த்திருக்கிறேன். அதுபோல அவர் ரமணா படத்தில் நடிக்கும் போது டூப் கூட வேண்டாம் என்று சொல்லிட்டாரு. ஆனால் வெளியே டூப் போட்டேன்னு சொல்லிருங்கன்னு சொன்னாரு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அண்ணி (பிரேமலதா) வந்திருந்தாங்க. அவங்க கிட்ட எக்காரணம் கொண்டும் டூப் இல்லாம நான் நடிக்கிறேன் என்று சொல்லக்கூடாது என்று சொல்லி இருந்தாரு.
விஜயகாந்தின் பெரிய மனது
நாங்களும் சார் டூப் தான் போட்டு இருக்காருன்னு சொல்லிட்டோம். இது பற்றி நாங்க அவரிடம் கேட்கும் போது டூப் போடுறவங்களுக்கு மட்டும் ரெண்டு உசுரான்னு கேட்டாரு. எத்தனையோ நடிகர்கள் சிஜி, எடிட்டிங், டூப் எல்லாம் போட்டுவிட்டு நான் நடித்தேன் என்று சொல்ல சொல்லுவார்கள். ஆனால் விஜயகாந்த் சார் தான் நான் நடித்த காட்சிகளை கூட டூப் போட்டேன் என்று சொல்லிவிடுங்கள் என்று சொன்னவர் என்று எமோஷனலாக பகிர்ந்து இருக்கிறார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications