Premgi: அப்பாவான பிரேம்ஜி.. எளிமையாக நடந்த வளைகாப்பு! குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர், பாடகர், இசையமைப்பாளர் எனப் பல முகங்களைக்கொண்ட ஒரு தனித்துவமான கலைஞரில், பிரேம்ஜியும் ஒருவர். அவருடைய ஒவ்வொரு படத்திலும் 'மாமன்'னு கூப்பிடுறதுக்கும், 'கவலைப்படாதீங்க'னு சொல்றதுக்கும்ன்னே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. இப்படி, சினிமாவில் ஒரு காமெடி மன்னனாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு, இப்போ ஒரு பெரிய மகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. அவர் அப்பாவாகிவிட்டாராம்!

முழுமையான சினிமாக்காரன்
பிரேம்ஜி, தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கங்கை அமரன் அவர்களின் மகன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி. 2003-லிருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும், 2005-ல் வெளியான 'ஞாபகம் வருதே' படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்புறம், பல படங்களுக்கு இசையமைத்தார்.
அவர் நடிப்புல ஒரு திருப்புமுனையா அமைந்தது, சிம்புவோட 'வல்லவன்' படம். அதுல சிம்புவோட நண்பரா அவர் நடிச்சிருந்தாலும், அவருடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கின 'சென்னை 600028' படத்துல, 'சீனு'ங்கிற ரோலில் அவர் காட்டிய காமெடி அட்ராசிட்டிதான், அவரை ரசிகர்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்தது. அதன் பிறகு, 'கோவா', 'மங்காத்தா', 'மாநாடு' என வெங்கட் பிரபுவின் படங்களிலெல்லாம் நடித்து, தனக்கென ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சுக்கிட்டார்.
45 வயதில் திருமணம்
பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு கல்யாணம் ஆகி ஒரு மகள் இருக்கும்போதும், பிரேம்ஜி மட்டும் 45 வயசு வரைக்கும் 'முரட்டு சிங்கிள்'னு சொல்லிக்கிட்டு சுற்றிக்கொண்டு இருந்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு எப்போது கல்யாணம்னு கேட்டு வந்த நிலையில், கடந்த வருஷம் ஜூன் மாசம், அவர் ஒரு பேங்க்ல சந்தித்த இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருத்தணியில் ரொம்ப நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவங்க திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அவருடைய அப்பா கங்கை அமரன், அண்ணன் வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், வைபவ் எனப் பலரும் கலந்துக்கிட்டாங்க.

அப்பா ஆன செய்தி
இப்படி, இவர்களின் முதல் ஆண்டு திருமண நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், இப்போது பிரேம்ஜி அப்பா ஆகிவிட்டதாக ஒரு செய்தி இணையத்துல காட்டுத் தீ போல பரவிக்கிட்டு இருக்கு. இந்த செய்தியை பிரேம்ஜி அதிகாரப்பூர்வமா அறிவிக்கல. ஆனா, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "September 4.44னு ஒரு மர்மமான போஸ்ட் போட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரேம்ஜி மற்றும் இந்துவின் வளைகாப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் பலரும் அவர் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் ஒரு காமெடி மன்னனாக கலக்கி வரும் பிரேம்ஜி, நிஜமாகவே அப்பா ஆகியிருந்தால், அது ரசிகர்களுக்கு ஒரு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications