பிரேம்ஜிஸ் மாமியார் மசாலாவை விடுங்க! வல்லமையில் புதிய அவதாரம் எடுத்த Premgi! லுக்கும் வித்தியாசமாமே!
சென்னை: நாம் இதுவரை ஜாலியாக பார்த்து ரசித்த பிரேம்ஜி புதிய படத்தின் மூலம் மாறுபட்ட எமோஷனல் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் காது கேளாத தந்தையாக நடித்திருக்கிறார்.
வல்லமை என்ற திரைப்படத்தில்தான் அவர் அவ்வாறு நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரேம்ஜி.

இவர் கங்கை அமரனின் மகனாவார். வெங்கட் பிரபுவின் தம்பி. இவர் அண்மையில் விஜய் நடித்த கோட் திரைப்படத்திலும் அவருக்கு மச்சானாக நடித்திருந்தார். சென்னை 28, சரோஜா, சிலம்பாட்டம், கோவா, மங்காத்த, பிரியாணி, வடகறி, தமிழ் படம் 2, ஜோம்பி மாநாடு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் "என்ன கொடுமை சார்" என பேசிய வசனம் பிரபலம்!
பிரேம்ஜி
இந்த நிலையில் பிரேம்ஜி கதாநாயனாக வல்லமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் காதுகேளாதவராக நடிக்கிறார். படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி , தயாரித்துள்ளார். ஜிகேவி இசையமைத்துள்ளார்.
பர்ஸ்ட் லுக்
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் டீசரை வெங்கட் பிரபு, லிங்குசாமி, சீனு ராமசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
பிரேம்ஜியின் கதாபாத்திரம்
தானா எதுவும் மாறாது, நாமதான் மாத்தணும்! என்பதை முன்னிறுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரேம்ஜியின் கதாபாத்திரம் மட்டுமல்ல தோற்றமும் மாற்றமாகவே உள்ளது. தாடி வைத்துக் கொண்டு தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டிருக்கிறார்.
பிரேம்ஜி நடிகர் மட்டுமல்ல
பிரேம்ஜி நடிகர் மட்டுமல்ல, இசையமைப்பாளர், பாடகர், ரேப் இசையில் வல்லவர் என பன்முகத்திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் சமைப்பதிலும் வல்லவர் என தெரிகிறது.
இந்துவுடன் திருமணம்
இவருக்கும் கடந்த ஆண்டு இந்து என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாளாக பிரேம்ஜிக்கு பெண் கிடைக்கவில்லை என கவலையில் இருந்தார் கங்கை அமரன். இந்த நிலையில் வங்கியில் பணியாற்றி வந்த இந்துவுடன் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
சேலத்து பெண்
இந்து சேலத்தை சேர்ந்தவர். அவருக்கு அப்பா இல்லை, அம்மாவும் தம்பியும்தான். பிரேம்ஜிக்கும் மனைவி இந்துவுக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்கிறார்கள். அதாவது பிரேம்ஜிக்கு 45 வயதும் இந்துவுக்கு 25 வயதும் நடப்பதாக சொல்கிறார்கள்.
வயது வித்தியாசம்
இந்த வயது வித்தியாசத்திற்காகவே இந்து வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாம். பிறகு தனது தாய்க்கு அவருடைய குணங்களை சொல்லி இந்து சம்மதிக்க வைத்தாராம். ஆனாலும் அவருடைய தம்பி, இந்துவிடமும் பிரேம்ஜியிடமும் பேசுவதில்லையாம். இதை இந்துவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தனது வீட்டாரே பார்த்திருந்தாலும் தனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்திருக்க மாட்டார்கள் என இந்து, பிரேம்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
சமைப்பதிலும் கில்லாடி
இந்துவின் தாய் நன்றாக சமைப்பாராம். அவர் எல்லாவற்றிற்கும் வீட்டிலேயே மசாலா அரைத்துக் கொள்வாராம். அந்த மசாலா பிசினஸை செய்யலாம் என இந்து முடிவு செய்தார். அதன்படி இந்த பிசினஸுக்கு என்ன பெயர் வைக்கலாம் என பிரேம்ஜி தனது இன்ஸ்டாவில் கேட்ட போது யாரோ ஒருவர் பிரேம்ஜி மாமியார் மசாலா என பெயரிடுமாறு கிண்டலாக சொன்னாராம்.
பிரேம்ஜி மாமியார் மசாலா
அந்த பெயரே பிடித்து விடவே பிரேம்ஜி மாமியார் மசாலா என்ற பெயரை வைத்துள்ளார். இவர்கள் கறி மசாலா, கரம் மசாலா, சிக்கன் ஃப்ரை மசாலா, மோரிங்கா பொடி, கருவேப்பிலை பொடி உள்ளிட்டவைகளை தயாரிக்கிறார்கள். இவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த மசாலாக்களை வைத்து பிரேம்ஜி சமைத்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications