"டார்லிங்.. லவ்யூ சோ மச்".. குவிந்து விட்ட ரசிகர்கள்.. அப்படியே புல்லரித்துப் போன பிரியா ராமன்!
சென்னை: பிரிந்த ஜோடி சேர்ந்தது..வாழ்க்கையில் மட்டுமல்ல சீரியலிலும் தான்...பிரியா ராமன் ரஞ்சித் ஜோடியை பார்த்ததும் ஹாப்பி ஆகியிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள் .
ஆதி கடவூர் அகிலாண்டேஸ்வரி ஆக ஜீ தமிழில் நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கும் பிரியாராமன் துரைசிங்கத்தின் மனைவி அருணாவாக விஜய் டிவியில் புது அவதாரம் எடுத்திருக்கிறார் .
இவருடைய மன மாற்றத்தை அறிந்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் தற்போது சீரியலிலும் இவர்கள் ஜோடி மீண்டும் இணைவதை பார்த்ததும் செம ஹேப்பியில் இருக்கின்றனர்.

சீரியலில் கலக்கல்
ஒருகாலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தவர்கள் வயது ஆக ஆக சினிமாவில் இருந்து ரிட்டையர் ஆகி சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர் .அந்த வரிசையில் பிரியா ராமனும் சினிமாவில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தவர், தற்போதும் அதே அழகோடு வலம் வருவதால் சீரியலில் காலடி எடுத்து வைத்தாலும் தனக்குன்னு ஒரு பெரிய அடையாளத்தோடு வலம் வருகிறார் .

ஜீ தமிழ்
இவர் தற்போது ஜீ தமிழில் டிஆர்பி யில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் பார்ப்பவர்களை எல்லாம் மிரட்டும் தோணியில் கலக்கலாக தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி வருகிறார். பொதுவாக ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சியில் தலையை காட்டி விட்டாலே போதும். ்தற்குப் பிறகு அந்த சேனலின் செல்லப்பிள்ளையாக மாறிவிடுவார்கள் .அதுபோல இவரும் பல வருடங்களுக்கு பிறகு சீரியலில் தலைகாட்டி இருப்பதால் இவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு அங்கு கிடைத்திருக்கிறது .

ஜீ ஜீன்ஸ்
ஜீன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இவர் ஜீ தமிழில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவரும் இவருடைய காதல் கணவரான ரஞ்சித்தும் நடிகர்களாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் சேர்ந்திருக்கின்றனர். அதுவும் தங்களுடைய திருமண நாளில் மீண்டும் சேர்ந்து இருப்பதை போட்டோ வெளியிட்டு இருவரும் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர்.

திருமண நாள்
இவர்களுடைய திருமண நாளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் ரஞ்சித் துரைசிங்கம் ஆக நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு முதல் திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் போது மனைவி இறந்து விட்ட காரணத்தினால் மீண்டும் தற்போது ரோஜாவை திருமணம் முடித்து இருக்கிறார் .

புகைப்படமாக ரிட்டர்ன்
இந்த நிலையில் தன்னுடைய மகள் அம்மாவின் போட்டோவை பார்க்க வேண்டும் என பிடிவாதமாக அழுது கொண்டிருப்பதைப் பார்த்து ரோஜா துரை சிங்கத்தின் முதல் மனைவி போட்டோவை வரைந்திருக்கிறார். அதனைப் பார்த்து அதிர்ச்சி ஆனது துரை சிங்கத்தின் மகள்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தான் .இதுவரைக்கும் ஜீ தமிழில் நடித்து வந்த பிரியா ராமன் விஜய் டிவியில் நடிக்கப் போகிறார் என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது. துரை சிங்கத்தின் மனைவி அருணா கேரக்டரில் பிரியாராமன் நடித்தாலும் இவர்களுடைய ஃபிளஷ்பேக் எப்போது வெளியாகும் என இவர்களுடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர் .

பட்டையைக் கிளப்பும் புரோமோ
தற்போது விஜய் டிவி வெளியிட்ட ப்ரொமோ பார்த்து பலரும் இந்த கேள்விகளை தான் கேட்டு வருகின்றனர் .அதே போன்று செந்தூர பூவே சீரியலில் சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது .அதில் பிரியா ராமனும் ரஞ்சித்தும் இளம் ஜோடிகள் போல ஒன்றாக உட்கார்ந்து இருக்கின்றனர். இவர்களுடைய போட்டோவை பார்த்ததும் எப்போது இந்த எபிசோடு வருமென தான் பலரும் மரண மாஸாக காத்து இருக்கின்றனராம் .
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications