இதுவரைக்கும் 3 கல்யாணம்.. 4 கொலை.. கொடூர வில்லத்தனம்.. மிரள வைக்கும் பிரியமானவள்!
Recommended Video

சென்னை: இது சீரியலா இல்லை சீரியல் கில்லிங்கா என்று கேட்கும் அளவுக்கு ஒரே கொலையும் கடத்தலுமாக போய்க் கொண்டிருக்கிறது பிரியமானவளே சீரியல்.
இந்த சீரியல் வந்த புதிதில் ஆகா, வன்முறையே இல்லாமல் ஒரு சீரியல் வந்துருச்சுய்யா என்று மக்கள் அகமகிழ்ந்தனர். காரணம், அப்படித்தான் ஆரம்ப எபிசோடுகள் சில இருந்தன. தாய்ப்பாசம், குடும்பப் பாசம் என்று கலகலப்பாக போய்க் கொண்டிருந்தது.
ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை... திடீரென வழக்கமான சீரியல் வில்லத்தனம் உள்ளே புகுந்தது. கொலையும், கடத்தலுமாக சீரியல் டிராக் மாற ஆரம்பித்தது.

மானம் கெட்ட மாப்பிள்ளை
இந்த தொடரின் முதல் கொலையே மானங்கெட்ட மாப்பிள்ளைதான். அவருடைய வில்லத்தனத்தை பொறுக்க முடியாமல் போட்டுத் தள்ளி விட்டனர். அட அது கூட பரவாயில்லைங்க. அப்படியே சினிமாவைக் காப்பியடித்ததுதான் கொடுமை.

பாபநாசம் படம் போல
பரபரப்பை ஏற்படுத்திய பாபநாசம் படத்தில் வரும் கொலை போலத்தான் இந்தக் கொலையும் இருந்தது. அதாவது காப்பி அடித்து கொலை செய்து விட்டனர்.. அதாவது மானம்கெட்ட மாப்பிள்ளையை.

தொடர் கொலைகள்
அதன் பின்னர் இதுவரை மொத்தம் 4 கொலைகள் நடந்துள்ளன. இன்ஸ்பெக்டர் பிரபுமணி, அய்யாவு, அவரது மகன் கண்ணன், கீதா என கொலைகள் நீண்டு கொண்ட போகிறது. அதிலும் அய்யாவு கொலையை அவரது மகனே செய்தது போல காட்டியது கொடூரத்தின் உச்சம்.

இஷ்டத்துக்கு கடத்தல்
அதை விட ஒரு கொடுமை இருக்குங்க. அதுதாங்க கடத்தல். ஆ ஊன்னா ஆட்களை கடத்துவது இந்த சீரியலின் தலையெழுத்து. எத்தனை பேரைத்தான் கடத்துவார்களோ. அதுவும் கல்யாண வீடு என்றாலே கடத்தல் கன்பர்ம். அதிலும் சமீபத்தில் இசை அரங்கேற்றிய காதல் கடத்தல் நாடகம் இருக்கே.. முடியலைப்பா முடியலை.

வில்லன்களும் வில்லிகளும்
அதேபோல இந்த தொடரில்தான் எத்தனை வில்லன்கள், வில்லிகள்., கிரிதரன், அவரது மனைவி கீதா, கிரியின் சகோதரன் தர்மா, நந்தினி, நந்தினியின் பெரியப்பா, அந்த பெரியப்பாவின் சின்ன வீட்டு பெண் சசிரேகா, ராம் என வில்லன்கள், வில்லிகள் லிஸ்ட்டும் ரொம்ப லென்த்தியாதான் இருக்கு.

ஒரு முடிவுக்கு வாங்க
இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இந்த உமா குடும்பம் இந்த சீரியலில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதுதான் ரொம்பப் பரிதாபம்.. முடியலய்யா முடியல.












Click it and Unblock the Notifications