"கன்னி கழியாத" மனைவியை ஆண்கள் எதிர்பார்க்க கூடாது.. பிரியங்கா சோப்ரா கருத்து.. வெடித்த பூகம்பம்
சென்னை: நடிகர் விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் "எந்த ஆணும் தன் மனைவி கன்னியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்று பிரியங்கா சோப்ரா பேசி இருக்கிறார். அதுதான் இப்போது விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
சில நடிகர்கள், நடிகைகள் சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சுகள் கூட அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு பிரச்சனை கொடுக்கும். அதே போலத்தான் இப்போது நடிகை பிரியங்கா சோப்ரா சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருந்தா சூப்பரா தமிழில் விஜய் உடன் "தமிழன்" திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க தொடங்கி பிறகு பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார்.

பிரியங்கா சோப்ரா கணவர்
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அமெரிக்கா பாடகர் லிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டார். இப்போது அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பாலின எதிர்ப்புகள் மற்றும் நவீன உறவுகள் பற்றி பேசியிருந்தார். அதில் சமீபத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குள் இருக்கும் புரிதல்கள் பற்றியும் பேசி இருந்தார்.
நடிகையின் சர்ச்சை பேச்சு
அப்போது "எந்த ஆணும் தன் மனைவி கன்னியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கன்னித்தன்மை என்பது ஒரே நாள் இரவில் மறைந்து விடும் ஒன்று. உண்மையிலே முக்கியமானது என்றால் ஒரு பெண்ணின் குணமும், மதிப்புகளும் தான். அதுதான் நீடித்திருக்கும்" என்று அவர் பேசி இருந்தார். இந்த கருத்து தான் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி இருக்கிறது.
பிரியங்கா சோப்ரா விளக்கம்
இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா சொன்னதை சிலர் பாராட்டி வருகிறார்கள். ஆனாலும் "சிலர் ஆண்கள் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என்றால், பெண்கள் செல்வத்தையும் அல்லது அதிக வருமானம் தருவதை எதிர்பார்க்கக் கூடாது. நல்ல குணம் உள்ள ஆணை மட்டும் தானே எதிர்பார்க்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். நடிகைகள் எதார்த்தத்தை உணராமல் ஏதோ பேசி விடுகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் இப்போது ஆண்களுக்கு தான் கஷ்டம் இருக்கிறது, திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காமல் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் 90ஸ் கிட்ஸ்களும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

ஆண்களின் குமுறல்
பெண்கள் எப்படி இருந்தாலும் ஓகே என்ற மனநிலைக்கு பல ஆண்கள் வந்து விட்டார்கள் என்றும் அதனாலயே பல கல்யாண ராணிகளிடம் 90ஸ் இளைஞர்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் என சில கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். அதோடு பிரியங்கா எப்படி ஆண்கள் பார்வை தவறு என்பது போல பேசி இருக்கிறார் என்றும் சிலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இந்த பேட்டி சமீபத்தியது இல்லை என்றாலும் இது இப்போது சோசியல் மீடியாவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.












Click it and Unblock the Notifications