கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமா? இதற்கா அவசரமாக திருமணம்? பிரியங்கா தேஷ்பாண்டே சொல்லாமல் சொன்ன பதில்
சென்னை: தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தொகுப்பாளினி. வெளி மாநிலத்தில் பிறந்திருந்தாலும், சென்னையில் வளர்ந்ததால் தமிழ் மொழியில் சரளமாக பேசும் திறமை பெற்றவர். சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், தி வால் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் அன்பைப் பெற்றவர்.

குக் வித் கோமாளி
பிரியங்காவின் பிரபலம் தொகுப்பாளினியாக மட்டும் நின்றுவிடவில்லை. பிக்பாஸ் 5வது சீசனில் 100 நாட்கள் மக்களை மகிழ்வித்து ரன்னர் அப் பட்டம் வென்றார். அதேபோல் குக் வித் கோமாளி 5வது சீசனில் வின்னராகவும் திகழ்ந்தார். இவை அனைத்தும் அவரது பன்முக திறமையை வெளிப்படுத்துகின்றன. விஜய் டிவிக்கு இவர் தனி செல்லம் என்றும் ரசிகர்கள் சொல்கிறார்கள்.
திடீர் திருமணம், வதந்திகள்
2016ல் பிரவீன் குமாரை திருமணம் செய்து 2022ல் விவாகரத்து பெற்ற பிரியங்கா, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி திடீரென வசி சச்சி என்ற டிஜே மற்றும் இவென்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திடீர் திருமணம் பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது.
வதந்திகளுக்கு அசத்தல் பதிலடி
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பரவிய அந்த வதந்திகளுக்கு பிரியங்கா கொடுத்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

உங்கள் வாய் உங்க உருட்டு
பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில், "உங்க வாய் உங்க உருட்டு" என்ற வாசகம் பொறித்த டீ-ஷர்ட் அணிந்து, குபீரென சிரித்தபடி காட்சியளித்தார். இந்த ஒரே புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
ரசிகர்களின் பாராட்டு மழை
இந்த வைரல் போஸ்ட் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பிரியங்காவின் தைரியத்தையும் நகைச்சுவை உணர்வையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவரது இந்த பதிலடி, பொதுவெளியில் பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படையற்ற விமர்சனங்களுக்கு எதிரான ஒரு துணிச்சலான நிலைப்பாடாக அமைந்துள்ளது.

சமூக ஊடகம்
பிரியங்காவின் இந்த செயல், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் நிற்பதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது. வாழ்க்கையை நகைச்சுவையுடன் அணுகும் அவரது தனித்தன்மை இந்த சம்பவத்தில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. எப்போதுமே தைரியமானவராகவே அறியப்படும் பிரியங்கா இப்போதும் மனம் தளரவில்லை என்பதை இந்த போட்டோ எடுத்துக்காட்டுகிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டேயின் இந்த வைரல் பதிலடி, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், மணிமேகலை உட்பட அவரால் பாதிக்கப்பட்ட பிறரின் ரசிகர்கள், அவர் ஏதோ டி சர்ட் போட்டால் நீங்களாக உருட்டுவீர்களா என்று கமெண்ட் போடுபவர்களை வம்பிழுத்து வருகிறார்கள். ஆனால் பிரியங்கா தேஷ்பாண்டேவை நன்கு அறிந்தவர்கள், அவரது டி சர்ட்டின் நோக்கம் நாம் மேலே சொன்ன விஷயம்தான் என்று உறுதியளிக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications