குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை விலக காரணம் பிரியங்கா தேஷ்பாண்டேவா? அப்படி என்ன செய்தார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளியில் இருந்து தான் வெளியேறுவதற்கு காரணம் குக்காக வந்த ஒரு ஆங்கர் என மணிமேகலை குறிப்பிட்டுள்ள நிலையில் அது பிரியங்கா தேஷ்பாண்டேவா என கேள்வி எழுந்துள்ளது.

குக் வித் கோமாளியில் இருந்து தான் ஏன் விலகுகிறேன் என்பதற்கான காரணத்தை பெயரை குறிப்பிடாமல், அதே சமயம் அனைவரும் எளிதில் ஊகித்துக் கொள்ளும் வகையில் அவர் விவரித்துள்ளார்.

cook with comali manimegalai

மணிமேகலை தனது போஸ்ட்டில் இந்த நிகழ்ச்சியானது மற்றொரு பெண் தொகுப்பாளினியால் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த நிகழ்ச்சியில் குக்காக இருக்க வந்த ஒருவர், தான் ஒரு குக் என்பதை மறந்துவிட்டு ஆங்கரிங் பணிகளில் தலையிட்டு என் பணியை செய்யவிடாமல் தடுக்கிறார்.

நான் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 15 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறேன். என் அனுபவத்தில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை பார்த்துள்ளேன். ஆனால் இது போல் முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்ததே இல்லை. என் வேலையை கெடுத்த நபர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்.

அவருக்கு நிறைய நிகழ்ச்சிகள், வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன். அப்போதுதான் அவரால் அடுத்தவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். வாழு வாழ விடு. இவ்வாறு மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது: மணிமேகலை சொல்வது பிரியங்காவைத்தான். இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் கூறியிருப்பதாவது: நான் நீண்ட காலமாக குக் வித் கோமாளி ஷோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் விஜே பிரியங்காவால் சில வாரங்களாக நான் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.

அவரது அடக்குமுறை, ஒன்றுமே இல்லாததை மிகைப்படுத்தும் நடைமுறை எல்லாம் பார்க்க முடியவில்லை. மற்றவர்களும் பெர்பார்ம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் பிரியங்காவே அடுத்தவர்களின் இடத்தையும் பறிப்பது என்பது எரிச்சலூட்டுகிறது. மற்றவர்களை சொல்லவிடாமல் ஒருவரே பேசுவது, எல்லாவற்றையும் தானே செய்வது போன்றவற்றை தாங்கவே முடியாது. இவ்வாறு அந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

cook with comali manimegalai


அது போல் மற்றொரு நெட்டிசன், மிகவும் தைரியமான பதிவும் முடிவும் என மணிமேகலையை பாராட்டியுள்ளார். ஒட்டுமொத்த ஷோவையும் பிரியங்கா கெடுக்கிறார். தேவையில்லாமல் ராமரை காதலிப்பது போன்ற டிராமாவை நடத்துகிறார். பிக்பாஸ் எப்படி அடக்குமுறையை கையாண்டாரோ அதையே இந்த நிகழ்ச்சியிலும் பிரியங்கா கையாள்கிறார். அவர் நல்ல கன்டென்ட் கொடுக்கிறார் என விஜய் டிவி இன்னமும் நம்புகிறது என இந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார். மணிமேகலையின் போஸ்ட்டை சிவாங்கி லைக் செய்திருக்கிறார்.

வெங்கடேஷ் பட் இருந்தவரை இது போன்றதொரு பிரச்சினைகள் இருந்ததில்லை என்கிறார்கள். பிரியங்கா சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அது போ் விஜய் டிவியின் 9ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான விருதையும் பிரியங்கா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குக் வித் கோமாளியில் முதல் பைனலிஸ்ட்டாக தேர்வாகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+