பிரியங்காவின் கணவர் வசி இலங்கை அரசியல் வாரிசு? அதுவும் இந்த குடும்பம்? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிரபலமான பிரியங்கா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய திருமண புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்டதும் அவருடைய கணவர் வசி யார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் இலங்கையில் பிரபலமான அரசியல் குடும்பத்தை சார்ந்தவர் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சித்திரை மாதம் பிறந்ததும் பிரபலங்களின் திருமண பங்க்ஷன் களைகட்ட தொடங்கி இருக்கிறது. எதிர்பாராத நேரத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய திடீர் திருமண அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரியங்கா வெளியிட்ட திருமண புகைப்படங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

Vijay TV Priyanka

முதல் திருமணம்

பிரியங்காவிற்கு சில வருடங்களுக்கு முன்பே விஜய் டிவி பிரபலம் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவர்களுடைய திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்து விட்டது. ஆனால் பிரியங்கா அது பற்றி அறிவிக்காமலே வைத்திருந்தார். அதனால் அவங்களுடைய இரண்டாவது திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலும் பிரியங்காவின் கணவர் யார் என்ற கேள்விகளும் இணையத்தில் அதிகமாக இருந்தது.

கணவர் பற்றி சர்ச்சை

பிரியங்காவின் கணவர் சீரியல் தயாரிப்பாளர் என்றும் அவர் டிஜேவாக இருக்கிறார் என்றும் பேசி வந்தனர். ஆனால் அவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாக இருக்கிறது. அதாவது பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழர் என்று ஏற்கனவே சிலர் பேசி இருந்தனர் அது போல பிரியங்காவின் கணவர் குடும்பம் இலங்கை திரிகோணமலையில் தான் வசித்து வந்திருக்கிறார்கள்.

இலங்கை பிரபலம்

இலங்கை வாழ் தமிழர்களிடம் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன்தானாம் பிரியங்காவின் கணவர் வசி. அதுபோல வசி இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

காதல் ஏற்பட்ட இடம்

தமிழ்நாட்டில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தி வருவது வாடிக்கையாக இருக்கிறது. அதுபோன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா போயிருந்த போதுதான் வசியுடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ பிரியங்காவின் இரண்டாவது திருமண வாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடி மகிழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது.

பிரியங்காவின் கனவுகள்

ஒரு சிலர் பிரியங்காவை விமர்சித்து வந்தாலும் அதிகமானோர் பிரியங்கா மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அவருடைய குடும்பத்தினர் ஆசை கனவு இனியாவது நிறைவேற வேண்டும் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். பிரியங்கா தன்னுடைய பக்கெட் லிஸ்ட் என்று சில ஆசைகளை பேட்டிகளில் கண் கலங்க பேசியிருக்கிறார்.

Vijay TV Priyanka

ரசிகர்களின் வாழ்த்துக்கள்

அதிலும் விஜே அர்ச்சனாவுடன் ஒரு பேட்டியில் பேசும்போது என்னுடைய கனவு ரொம்ப சின்னது தான் எனக்கு என்னுடைய கணவர் என் மீது அதிக அன்பு காட்ட வேண்டும், என்னை அதிகமாக தாங்க வேண்டும், என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு அவர் சப்போர்ட் கொடுக்க வேண்டும், குழந்தைகளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, என்று சொல்லி இருந்தார். அந்த ஆசை நடக்கட்டும் என்று நம்முடைய வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+