உதயநிதி பற்றி மோசமாக போஸ்ட் போட்ட கஸ்தூரிக்கு சிக்கல்.. விமர்சனம் செய்தவருக்கே வந்த வினை! ரவுண்ட் கட்டும் ரசிகர்கள்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பரவி வரும் சர்ச்சை பேச்சு இன்னும் அடங்காத நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்க நினைத்த நடிகை கஸ்தூரி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கிறார். உதயநிதியை விமர்சிக்க அவர் வெளியிட்ட பதிவு தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது.
நடிகை கஸ்தூரி பதிவு
கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில், காவிரி பிரச்சனையை பேசுறேனு சொல்லிக்கிட்டு சாக்கடையை திறந்து விட்ட உதயநிதி... தாத்தா வந்ததும் தண்ணீர் திறந்து விட்டார்... இவருக்கு வரலையேன்னு காண்டு போல... கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மதுவை தொறந்து விட்டாரே அதை சொன்னேன் என்று #gutterspeech #udhayanidhi என்று ஹேஷ்டேக் போட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சோசியல் மீடியாவில் கடும் விவாதம் வெடித்தது.
உதயநிதி பேசியது இரட்டை அர்த்தம், நாகரீகம் பெற்ற பேச்சு என்று விமர்சித்த கஸ்தூரி அவரை விமர்சிக்கும் போது பயன்படுத்திய வார்த்தைகளும் அதேபோல தரம் குறைந்ததாக இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஒருவரை கண்டிக்க வேண்டும் என்றால் நாகரீகமாக கண்டிக்கலாம்.. ஆனால் அவர் பேசியது தவறு என்று அதே மொழியில் பதில் சொன்னால் வித்தியாசம் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரச்சனை உருவான இடம்
காவிரி உரிமை தொடர்பான பொது கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து திரிஷா.. திரிஷா என்று முழக்கங்கள் எழுந்தன. அதன் பின் அவர் கூறிய ஒருவரி சோசியல் மீடியாவில் இரட்டை அர்த்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பாஜக, தவேக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
திரிஷாவின் அமைதி
தவெக நிர்வாகிகள் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். பாஜக தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை குஷ்புவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த பேச்சை கண்டித்து இருக்கிறார். இந்த முழு விவாகரத்தில் அதிகம் பேசப்படும் பெயராக திரிஷா இருந்தாலும் அவர் இதுவரை எந்த விளக்கமும், கண்டனமும் தெரிவிக்கவில்லை.

ரசிகர்கள் கருத்து
இந்த நிலையில் உதயநிதியின் பேச்சை கண்டிப்பதற்காக கஸ்தூரி வெளியிட்ட பதிவு இப்போது அவருக்கே எதிர்பாராத வகையில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் "சாக்கடை " என்று சொல்லி பயன்படுத்திய வார்த்தைகளும் தேவையற்றவை என்று ஒரு சிலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
உதயநிதி சர்ச்சை.. அதே நேரத்தில் நிவேதா பெத்துராஜின் திருக்குறள் பதிவு.. திரிஷாவுக்கு சப்போட்டா? காயத்திற்கான பதிலா?
அதோடு இன்னும் ஒரு சிலர் உண்மையில் உதயநிதி அதுபோல பேசியிருந்தாலே தவறு, ஆனால் அவரை கண்டிக்கிறேன் என்கிற பெயரில் நீங்களும் அதையே பேசி இருப்பதும் தவறுதான். இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை... இது போன்று ஒரு கண்டிப்பு தேவையா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications
