Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ரோமோஷனுக்கு வராததால் கடுமையாக பேசிய தயாரிப்பாளர்.. யோகி பாபு கொடுத்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று நடந்த கஜானா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த திரைப்படத்தின் நடித்த யோகி பாபு ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார், அதற்காக 7 லட்சம் பணம் கேட்கிறார், அவர் நடிப்பதற்கே தகுதி இல்லாதவர் என்று பட தயாரிப்பாளர் ராஜா என்பவர் குற்றம் சாட்டி பேசி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து யோகி பாபு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

யோகி பாபுவை திட்டிய தயாரிப்பாளர்

அதுபோல யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் கஜானா திரைப்படத்தின் ப்ரோமோஷனில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா மேடையில் கடுமையாக பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, யோகி பாபு இந்த மேடையில் இருக்கிறாரா? என்று கேட்க அங்கிருந்தவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். பிறகு கூட்டத்தில் இருக்கிறாரா என்று கேட்க அங்கும் இல்லை என்று தெரிந்ததும் ஒரு நடிகனுக்கு தான் நடித்த திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இல்லை என்றால் நீ நடிகனாக இருக்க லாயக்கு இல்ல.

Yogi Babu Vijay TV

தயாரிப்பாளர் ஆதங்கம்

ஒரு ப்ரோமோஷனுக்கு வரமாட்டேங்கிறீங்களா? இதுக்கு நான் வண்மையாக கண்டிக்கிறேன். இதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இவங்க ஏழு லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் அவர் ப்ரோமோஷனுக்கு வரமாட்டார். ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தா யோகி பாபு ப்ரோமோஷனுக்கு வந்து இருப்பார். இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம். தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்... அதற்கு அவங்க சொல்றாங்க சொல்லல, பண்றாங்க பண்ணல, என்ன வேணாலும் நடக்கட்டுமே... தன் படம் என்பது தன்னுடைய குழந்தை. ஒரு நடிகனுக்கு இந்த பொறுப்பு இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

யோகி பாபு தரப்பு விளக்கம்

இது பற்றி யோகிபாபு தரப்பினர் பேசும்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜா என்பவர் யார் என்றே எங்களுக்கு தெரியாது. பல ஆண்டுகளாக 'கஜானா' திரைப்படம் எடுக்கப்பட்டது. அதுபோல இப்போது யோகி பாபு பிஸியாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் பல லட்சம் இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க நேரிடும். இதை மற்ற பட குழுவினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் முடிந்த வரைக்கும் தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு யோகி பாபு சென்று வருகிறார் என்று கூறியிருக்கின்றனர்.

Yogi Babu Vijay TV

படத்தில் நடிகர்கள்

யோகி பாபு எதனால் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்பது அங்கிருந்து யாரும் விளக்கம் கொடுக்கவில்லை. யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகரன் போன்றோர் முக்கியமான கேரக்டரில் நடிக்க கஜானா திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகை சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அதுபோல 4 ஸ்கொயர் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு விக்ரம் வர்மன் இசை அமைத்திருக்கிறார். கோபித்துரைச்சாமி, வினோத் ஜேபி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் கதை

கே எம் ரியாஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்தின் கதையானது அழிந்து போன ஆதி உயிரினமான யாழி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்டமான கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகச பயணத்தை வைத்து தான் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.இதில் கஜானாவை காப்பாற்ற போராடும் பேய்களின் அட்டகாசங்களும் காமெடியோடு திகழுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் மே பதினெட்டாம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+