யோகி பாபு நடிகராக இருக்க தகுதியே இல்லை.. ஏழு லட்சம் கொடுத்தா தான் பண்ணுவீங்களா? தயாரிப்பாளர் ஆவேசம்
சென்னை: நடிகர் யோகி பாபு அவர் நடித்த கஜானா திரைப்பட ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா விமர்சனம் செய்திருக்கிறார். யோகி பாபு நடிகராக இருக்க தகுதியே இல்லை, தான் நடித்த திரைப்படத்தின் பிரமோஷனுக்கு வருவதற்கு கூட ஒரு மனிதருக்கு விருப்பமில்லை என்றால் அவரால் எப்படி சினிமாவில் நடிக்க முடியும்? இவருக்கு காலம் பதில் சொல்லும் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் யோகி பாபு. யோகி பாபு விஜய் டிவியில் ஆரம்பத்தில் சில காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு இப்போது வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

யோகி பாபுவை திட்டிய தயாரிப்பாளர்
அதுபோல யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் கஜானா திரைப்படத்தின் ப்ரோமோஷனில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா மேடையில் கடுமையாக பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, யோகி பாபு இந்த மேடையில் இருக்கிறாரா? என்று கேட்க அங்கிருந்தவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். பிறகு கூட்டத்தில் இருக்கிறாரா என்று கேட்க அங்கும் இல்லை என்று தெரிந்ததும் ஒரு நடிகனுக்கு தான் நடித்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இல்லை என்றால் நீ நடிகனாக இருக்க லாய்க்கு இல்ல.
தயாரிப்பாளர் ஆதங்கம்
ஒரு ப்ரோமோஷனுக்கு வரமாட்டேங்கிறீங்களா? இதுக்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இவங்க ஏழு லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் அவர் ப்ரோமோஷனுக்கு வரமாட்டார். ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தா யோகி பாபு ப்ரோமோஷனுக்கு வந்து இருப்பார். இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம். தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்... அதற்கு அவங்க சொல்றாங்க சொல்லல, பண்றாங்க பண்ணல, என்ன வேணாலும் நடக்கட்டுமே... தன் படம் என்பது தன்னுடைய குழந்தை. ஒரு நடிகனுக்கு இந்த பொறுப்பு இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
ரசிகர்களின் கோரிக்கை
யோகி பாபு எதனால் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்பது அங்கிருந்து யாரும் விளக்கம் கொடுக்கவில்லை. அதேபோல இது குறித்து யோகி பாபு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகரன் போன்றோர் முக்கியமான கேரக்டரில் நடிக்க கஜானா திரைப்படம் உருவாகி இருக்கிறது.
படத்தில் நடிகர்கள்
இந்த திரைப்படத்தில் நடிகை சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அதுபோல 4 ஸ்கொயர் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் கதை திரைக்கதையை பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு விக்ரம் வர்மன் இசை அமைத்திருக்கிறார். கோபித்துரைச்சாமி, வினோத் ஜேபி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் கதை
கே எம் ரியாஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்தின் கதையானது அழிந்து போன ஆதி உயிரினமான யாழி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்டமான கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகச பயணத்தை வைத்து தான் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் கஜானாவை காப்பாற்ற போராடும் பேய்களின் அட்டகாசங்களும் காமெடியோடு திகிலுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் மே பதினெட்டாம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications