முதல் முயற்சியே வெற்றியாம்!! ரவீந்தர் கூறிய மகிழ்ச்சியான செய்தி.. காரணம் மகாலட்சுமி தானாம்..!!
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் பெற்ற மகிழ்ச்சியை குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய வெற்றிக்கு காரணம் தன்னுடைய காதல் மனைவியான மகாலட்சுமியின் வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.
இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முயற்சியே பாராட்டுகளை பெறும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார் போல! ! அவ்வளவு சந்தோஷமாக பகிர்ந்து உள்ளார்.

பிக் பாஸ் ரிவ்யூ
தயாரிப்பாளர் ரவீந்தர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பெற்ற வெற்றியை குறித்து மகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டு இருக்கிறார். ரவீந்தர் லிப்ரா ப்ரொடக்ஷன் மூலமாக ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் அவர் திரை பிரபலங்களுக்கு பழக்கமானவர் தான். ஆனாலும் பிக் பாஸ் ரிவ்யூ கொடுத்து ரசிகர்களின் மத்தியில
நல்ல ஒரு வரவேற்பையும், பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரையும் இவர் கழுவி ஊத்துவதை பார்ப்பதற்காகவே இவருக்கு அதிகமான பாலோவர்ஸ் வந்து கொண்டிருக்கின்றனர்.

நகைச்சுவையான கேரக்டர்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் பலர் யூடியூப் சேனல்களில் அந்த நிகழ்ச்சியை பற்றி ரிவ்யூ செய்து தங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே கருத்தாக பதிவிட்டு வருவார்கள். அதில் ஒருவராக ரவீந்தரும் இருந்து வருகிறார். தனக்கே உரிய நகைச்சுவை கலந்த கிண்டலோடு இவர் ஒவ்வொரு போட்டியாளர்களை பேசுவதை பார்க்கும் போது பிடித்து போன ரசிகர்கள் மறுமுறை இவர் யாரைப் பற்றி பேச போகிறார் என்று தினமும் இவருடைய ரிவ்யூக்காக காத்திருக்கின்றனர்.தான் பிக் பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து வருவதுபோல இவரைப் பற்றி கலாய்ப்பவர்களை இவர் கண்டு கொண்டதே கிடையாதாம்.

தொடர்ந்து வரும் உருவ கேலி
ரவீந்திரருடைய உடல் எடையை குறித்து அதிகமாக உருவ கேலி ஆரம்பம் முதலில் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை எல்லாம் சட்டை செய்யாமல் இவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாம் திருமணம் என்றாலும் தற்போது சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வருகின்றனர். இவர்களுடைய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கலாய்ப்பவர்களுக்கு கிடைத்த கண்டெண்டாக தான் இருந்து வருகிறது.

முதல் வெற்றி
திருமணத்திற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் தற்போது முதல் முறையாக பட்டிமன்றம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அவரோடு போட்டி போடும் போட்டியாளராக பிக் பாஸ் அபிஷேக் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான ஞானசம்பந்தம் தான் நடுவராக இருந்துள்ளார். அதில் ரவீந்திர் அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதுவும் ரவீந்தருடைய பேச்சுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறதாம். இந்த வெற்றியை தன்னுடைய ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அதில் எனது முதல் பட்டிமன்றம் வெற்றி பெற்றது. என் பேச்சுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. அதற்குக் காரணம் என் அம்மாவின் ஆசிகளும், பொண்டாட்டியின் வாழ்த்துக்களும் தான் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ரவீந்தருக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியால் மகாலட்சுமியும் ஹாப்பியாகத்தான் இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications