விவாகரத்தா? சோகத்தில் போஸ்ட் போட்ட ரவீந்தரிடம் ரசிகர் கேள்வி.. எதிர்பார்க்காத பதில்! இப்படி ஆகிட்டு!
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர் ஒருவர், "உங்களுக்கு உங்கள் மனைவியோடு விவாகரத்து ஆகிவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு வெளிப்படையாக ரவீந்தர் கொடுத்த விளக்கம் தான் இப்போது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த தம்பதி கடந்த வருடம் முழுக்கவே இணையத்தில் ட்ரெண்டிங் ஆன ஜோடியாக இருந்து வந்தனர்.

அதனாலேயே என்னவோ மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் வாழ்க்கையில் அடுத்தடுத்த சில புயல் தாக்க தொடங்கியது. ரவீந்தர் மீது ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் அதன் காரணமாக ரவீந்தர் நீதிமன்ற காவலில் இருந்தார். அதற்கு பிறகு பல போராட்டங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் தான் எந்த தவறும் செய்யவில்லை.
என் மீது எந்த தப்பும் இல்லை என்பது பற்றிய உண்மையை சீக்கிரத்தில் வெளியே கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகு திடீரென்று ரவீந்தரின் உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் இருந்த ரவீந்தர் சில தினங்களுக்கு பிறகு மருத்துவமனையில் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் போட்டபடியே பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்திருந்தார்.
அந்த புகைப்படங்கள் வெளியான பிறகு ரசிகர்கள் என்ன ஆச்சு இவருக்கு என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதோடு இவ்வளவு முடியாமல் இருக்கும் நேரத்தில் இவர் எதற்காக இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து கொண்டிருக்கிறார். என்று உரிமையோடு இவரை சிலர் திட்டவும் செய்திருந்தனர். அதே நேரத்தில் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய உடல் எடை குறித்து வெளியாகும் நெகட்டிவ் கமெண்ட்களை கூட கண்டுகொள்ளாத ரவீந்தர் நேற்று இன்ஸ்டாகிராம் பதிவில் மொட்டை தலையோடு ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தார்.
அதற்கு மகாலட்சுமி என்னுடைய கணவர் மீண்டும் பழையபடி வந்துவிட்டார் என்று ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் இன்று தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு "என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதற்கு im_ sathish என்ற ஐடியில் இருந்து விவாகரத்து ஆயிருச்சா என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.

அதற்கு ரவீந்தர், "எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது. அது சாத்தியமற்றது.." என்று பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் மகாலட்சுமியும் அவருடைய கணவரும் ஒற்றுமையாக இருப்பதே சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இப்படி கமெண்ட்களில் வன்மத்தை கக்குகிறார்களா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் ரவீந்தர் எந்த போஸ்ட் போட்டாலும் அதற்கு பதில் கொடுக்கும் மகாலட்சுமி இந்த போஸ்ட்க்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications