சொத்துக்கள் சிதறின.. சிவாஜி வீட்டின் 9 கிலோ தங்கம்.. கமலை கடனில் மீட்ட "குருவான மூர்த்திகள்".. நிஜமா
சென்னை: சிவாஜி வீட்டு கடனை மீட்க கமல் உதவுவாரா? என்று சிலர் கேட்கிறார்கள்.. கமலுக்கே இப்போது உதவி தேவைப்படுகிறது.. ஒரு எம்பி சீட்டுக்காக, அறிவாயலத்தில் டார்ச் லைட்டுடன் துண்டு போட்டு படுத்திருக்கிறார்.. ஆனால், திமுகவோ சீட் தருமா தெரியவில்லை.. இப்படித்தான் கலைஞர், "இதயத்தில் இடமுண்டு" என்று எல்லார்கிட்டயும் சொல்லிட்டே இருந்தாரு. அப்படியிருக்கும் போது, சிவாஜி குடும்பத்தை மீட்க கமலுக்கு வழியில்லை" என்று பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "ராம்குமார், பிரபு இருவருமே திட்டமிட்டு வாழ தெரியாதவர்கள்.. சிவாஜிக்கு பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்கள் உள்ளன.. சாந்தி தியேட்டர், அன்னை இல்லம், போரூர் ராமச்சந்திரா பக்கத்தில் பல ஏக்கர் நிலம், இவை எல்லாமே கடனில் விழுந்துள்ளது. எல்லாத்துக்கும் காரணம், திரைப்பட துறையில் போதிய அனுபவமில்லாமல் சொத்துக்களை இழக்க நேரிட்டுவிட்டது.

குடும்ப சொத்தில் பங்கு கேட்டு, பிரபுவின் சகோதரிகள் வழக்கு தொடுத்தார்கள்.. இந்த வழக்கு அன்று நீதிமன்றம் செல்கிறது.. அப்போது இந்த விஷயத்தில் ரஜினி தலையிட்டார்.. பெரிய கலைக்குடும்பத்துக்கு தலைகுனிவு நேரிட கூடாது என்று நினைத்து, நான் உங்களுக்கு படம் பண்ணி தருகிறேன் என்று சொல்லி, சிவாஜி வீட்டு கடனை அடைக்கவே எடுக்கப்பட்ட படம் சந்திரமுகி.
2 பெண்களும் மாறி மாறி குற்றச்சாட்டு
அந்த கடனை அடைத்துவிட்டு, மீண்டும் இவர்கள் கடன் வாங்கினால் எப்படி? இனி கடன் வாங்க வேண்டாம் என்று 2 பெண் வாரிசுகளும், சொல்லி கொண்டே இருந்தார்கள்...
வீட்டிலிருந்த 250 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள் திருடு போய்விட்டது, ராம்குமார், பிரபு வீட்டில் யாரோ அவைகளை எல்லாம் கொண்டு போய்விட்டார்கள் என்று 2 பெண் வாரிசுகளும் குற்றஞ்சாட்டினார்கள். பிறகு தாயின் 9 கிலோ தங்க நகைகளையும் எங்களுக்கு தராமல் எடுத்து கொண்டார்களாம் என்று மீண்டும் அப்பெண்களிடம் புகார் வெடித்தது. போரூர் பண்ணை வீடும் 13 கோடி ரூபாய் கடனில் உள்ளது.
கமல் உதவி செய்வாரா?
சம்பாத்யம் இல்லாமல் செலவுகள் மட்டும் இருந்துகொண்டே இருந்ததால் ஏற்பட்ட விளைவுதான் இதெல்லாம்.. ரஜினி கடந்த முறை உதவியதுபோல இந்த முறை கமல் உதவுவாரா? என்று சிலர் கேட்கிறார்கள். அவராலும உதவ முடியாது. காரணம், கமலுக்கே உதவி தேவைப்படுகிறது. கமலும் இப்படியொரு நெருக்கடியை சந்தித்திருக்கிறார்..
சொந்தமாக கட்சியை ஆரம்பித்தார்.. 200 கோடி ரூபாய் கடனை ஆந்திரா வங்கி மூலம், பிஜேயின் "குருவான மூர்த்தி"கள் கடனை அடைத்து விட்டார்கள். அதனால், அதிலிருந்து விடுபட்டு, திமுகவிடம் சரணடைந்துவிட்டார்..
திமுகவிடம் சரண்
ஒரு எம்பி சீட்டுக்காக, அறிவாயலத்தில் டார்ச் லைட்டுடன் துண்டு போட்டு படுத்திருக்கிறார்.. ஆனால், திமுகவோ சீட் தருமா தெரியவில்லை.. இப்படித்தான் கலைஞர், "இதயத்தில் இடமுண்டு" என்று எல்லார்கிட்டயும் சொல்லிட்டே இருந்தாரு. அப்படியிருக்கும் போது, சிவாஜி குடும்பத்தை மீட்க கமலுக்கு வழியில்லை.
இந்த விஷயத்தில் அஜித் நினைத்தால் வழியுண்டு என்று பேசிக் கொள்கிறார்கள்.. ஆனால் லைகா எடுத்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால், அஜித் வருத்தத்தில் உள்ளார்.. கோடிகளில் லைகாவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.. அஜித்துக்கும் பல வகைகளில் நட்டம். ஆனால், இதயம் உள்ளவர், மனசாட்சி உள்ளவர் அஜித்தான்" என்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications