சொத்து பத்திரம் போலி? மனம் நொந்த பிரபு, ராம்குமார்.. சகோதரிகளுடன் சமாதானம்? சிவாஜி ரசிகர்கள் நிம்மதி
சென்னை: சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை, நீதிமன்றம் வரை சென்றிருந்த நிலையில், இப்போது அந்த விவகாரம் சுமூகமாக பேசி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. சிவாஜியின் வாரிசுகள், தங்கள் மனம்விட்டு பேசி, சமாதானம் ஆகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கு பெருத்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை சமீபத்தில் வெடித்தது. சிவாஜி மரணத்துக்கு பிறகு, 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய 2 சகோதரிகளும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதாவது, தன்னுடைய அப்பா சிவாஜி எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது, உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்றும், சாந்தி தியேட்டரில் இருந்த தந்தையின் 50 சதவீதம் பங்குகளும், தாய் கமலாவின் 50 சதவீதம் பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றெல்லாம் நீதிமன்றத்தில் புகார்கள் முன்வைக்கப்பட்டன.
சிவக்குமார்: இந்த சொத்து பிரச்சனைகளுக்கு நடுவில், ராம்குமார் மகன் சிவக்குமார் விவகாரமும், மீடியாவில் பரபரக்க துவங்கியது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவக்குமார் பங்கேற்றதிலிருந்தே ராம்குமார் குடும்ப விவகாரம் அதிகமாகவே பேசப்படுகிறது.
2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை சமீபத்தில் தந்திருந்தார். அதில், "சொத்துக்கள் விஷயத்துக்குள் நாம் நுழைய வேண்டாம். ஆனால், ராம்குமாருக்கென்று சொத்துக்கள் இருக்குமே? அதை சிவக்குமாருக்கு தரலாமே? அவருக்கென்று எந்த சொத்தும் இல்லையா?" என்றெல்லாம் பேசிருந்தார்.
சொத்துக்கள்: அதேபோல கடந்த வாரம், Aagayam Tamil யூடியூப் சேனலில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசும்போது, "ராம்குமார், பிரபு இருவருமே, சிவாஜி எழுதியது போல உயில் எழுதிவைத்து, பல ஆயிரம் கோடி சொத்துக்களை ஏமாற்றி விட்டதாக, சாந்தியும், தேன்மொழியும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
1000 பவுன் நகை, 500 கிலோ வெள்ளி, சாந்தி தியேட்டர், 2 ஏக்கர் அன்னை இல்லம், போரூரில் உள்ள பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள இடம், இதெல்லாம் மோசடி செய்துவிட்டார்களாம். வழக்கு காரணமாக அன்னை இல்லம் பூட்டு போடப்பட்டு, இருட்டில் உள்ளது. சொத்துக்கள் வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே குடும்பத்துக்குள்ளேயே பெண் கொடுத்து, பெண் எடுத்து கொண்டார்கள். ஆனாலும் சொத்து விவகாரம் வெடித்துவிட்டது" என்றெல்லாம் நிறைய விஷயங்களை பேசியிருந்தார்.
மனம் நொந்த சகோதரர்கள்: இந்நிலையில், சிவாஜி குடும்பத்து சொத்து பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதாக பிரபல சேனலில் செய்தி வெளியாகியிருக்கிறது.
அதாவது, "போலி உயில் மோசடி" என்றெல்லாம் மீடியாவில் செய்திகள் வெளியானது ராம்குமார், பிரபுவை அதிக மனவேதனைக்கு ஆளாக்கிவிட்டதாம். இதனால் மனம் நொந்துபோன இருவரும், தங்கள் சகோதரிகளிடம் சொத்து பிரச்சனை குறித்து விரிவாக பேசி இறுதியில், சில சொத்துகளை தங்கள் சகோதரிகளுக்கு தருவதற்கு சகோதரர்களும் ஒப்புக் கொண்டார்களாம். அத்துடன், குடும்பத்துக்குள் இனி சொத்து பிரச்சனை எழவே கூடாது என்றும் அனைவரும் பேசி முடிவு எடுத்துள்ளார்களாம்.
மகிழ்ச்சி: தன்னுடைய குடும்பம் எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே சிவாஜி கணேசனின் விருப்பமாக இருந்த நிலையில், இப்போது சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் மனக்கசப்புகள் விலகி சமாதானமாகியிருப்பது சிவாஜி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications