மூஞ்சியில சாஸ் ஊத்தியதுமே.. நக்கிட்டு கிஸ் பண்ணிடு.. கிரேட் பாலச்சந்தர்: புதுப்புது அர்த்தங்கள் கீதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை கீதா, 70"களின் இறுதியிலிருந்தே சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர்.. இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளவர்.. ஹீரோயினாக நடித்தாலும், கேரக்டர் ரோலிலும், பிறகு அம்மா கதாபாத்திரங்களில் நடித்து பிஸியாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றுக்கு கீதா தந்திருந்த பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் இயக்குனர் பாலச்சந்தர் குறித்து முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மூத்த நடிகை கீதாவை பொறுத்தவரை, 200 படங்களில் நடித்துள்ளார்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தோஷ்‌ சுப்ரமணியம் படத்தில் ரீ என்ட்ரி தந்தவர்.

Television actress geetha Pudhu Pudhu Arthangal

ஆனால், தன்னுடைய முதல் படத்தில் நடிக்கும்போது, கீதா ரொம்பவே திணறிவிட்டாராம்.. ரஜினிகாந்த் நடித்த பைரவி படத்தில் அவரது தங்கையாக கீதா நடித்திருப்பார். இந்த படத்தில் கீதாவுக்கு தமிழ் பேச வரவில்லையாம்..

கடுப்பான டைரக்டர்

இதனால் கடுப்பான டைரக்டர் எம்.பாஸ்கர், பேக் அப் சொல்லிவிடலாம் என்றாராம். இதைக்கேட்டு பதறிப்போன தயாரிப்பாளர் கலைஞானம், ஷூட்டிங் ரத்தானால் பெரிய அளவில் நஷ்டம் வருமே என்று நினைத்து, கீதாவிற்கு தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாராம்.. ஒவ்வொரு வார்த்தையாக, ஒவ்வொரு வரியாக கீதாவுக்கு தமிழை சொல்லி தந்துதான், அந்த படத்தை முடித்துள்ளார்கள்..

அப்படிப்பட்ட கீதா, புதுப்புது அர்த்தங்கள் படத்தில், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் பாராட்டையும், தன்னுடைய நடிப்புக்காக பெற்றவர் ஆவார்.

மனித உறவு சிக்கலின் பல்வேறு பரிமாணங்களை சினிமாவில், விரிவாகவும், ஆழமாகவும் சொன்னவர் டைரக்டர் கே.பாலசந்தர்... சர்ச்சைகள் இருந்தாலும், சமுதாயத்துக்கு தீங்கிழைக்காத, அதேசமயம் ஆழ்ந்து யோசிக்கக்கூடிய அளவுக்கு பல்வேறு நுட்பமான விஷயங்களை தன்னுடைய சினிமாவில் கொண்டு வந்தவர்.

பொசஸிவ்னெஸ் மனைவி

அதில் மிக முக்கியமான படம் புதுப்புது அர்த்தங்கள்.. பொசஸிவ்னெஸ் மனைவியிடம் அகப்பட்டு தவிக்கும் கணவனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என்று, ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைத்து, சந்தேகத்தையும், வன்மத்தையும் கொட்டி தீர்க்கும் மனைவி ஒருபக்கம், அந்த மனைவியின் சித்ரவதை தாங்காமல் வீட்டை விட்டே ஓடிப்போகும் கணவன் மறுபக்கம் என இருவரின் உணர்வுகளையும் திரையில் கொண்டு வந்திருப்பார் பாலச்சந்தர். இந்த படத்தில், ரகுமானும், கீதாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.

கணவர் மீது அளவு கடந்த பாசத்தையும், அளவுகடந்த எரிச்சலையும், அளவுகடந்த சந்தேகத்தையும் கொட்டும் கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருப்பார் கீதா.. குறிப்பாக, டைனிங் டேபிளில் தம்பதிக்குள் நடக்கும் சண்டை, பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தமான காட்சியாம்.

டைனிங் டேபிள் சாஸ்

அதாவது, கணவன் மீதுள்ள கோபத்தில், கேட்க வேண்டிய விஷயத்தையெல்லாம் கேட்டு முடித்துவிட்டு, அந்த ஆவேசம் அடங்குவதற்குள் டைனிங் டேபிளில் இருந்த சாஸை எடுத்து கணவன் மீது எறிந்துவிடுவார்.. இதை பாலச்சந்தரே எதிர்பார்க்கவில்லையாம்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பாலச்சந்தர் அடடே சூப்பரா இருக்கு, அப்படியே பண்ணு எக்ஸ்பிரஷன் கொடு, அவன் கிட்ட போய் சாஸை நக்கிட்டு கிஸ் பண்ணிடு என்றாராம். அப்போது தான் கணவரின் கோபத்தை அடக்கும் மனைவியாகவும் தெரியும், என அவர் அப்படி சொல்லி கொண்டே இருக்க இங்கே நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். பாலச்சந்தரும் ஸ்பான்டேனியஸாக நடிக்க வேண்டும் என்றார்.

சமீபத்தில் நடிகை கீதா, பாலச்சந்தருடன் தான் பணியாற்றிய அனுபவங்களை குறித்து இந்தியாக்ளிட்ஸ்க்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. இதில், இந்த காட்சி பற்றி விரிவாகவே பேசியிருந்தார்.

வசனம் - பாலச்சந்தர்

வசனத்தையும் பேசிமுடித்துவிட்டு, ரகுமான் மீது சாஸ் கொட்டிவிட்டு, அதற்கு பிறகு என்ன செய்வது என தெரியாமல் நின்றாராம்.. அப்போது உடனே பாலச்சந்தர், "அடடே சூப்பரா இருக்கு.. எக்ஸ்பிரஷனை உடனே மாத்து.. சாஸ் நல்லா இருக்குன்னு எக்ஸ்பிரஷன் பண்ணு... அப்படியே அவன் கிட்ட போய் கிஸ் பண்ணி, சாஸை நக்கிடு".. அப்பதான் கோபக்கார கணவரை , சமாதானம் செய்வது போல இருக்கும் என்று சொல்லி கொண்டே, அதுபோலவே நடித்து காட்டினாராம்.

ஒருபக்கம் பாலச்சந்தர் நடித்து காட்டிக்கொண்டிருக்க, கீதா இதை அப்படியே நடித்து அசத்திவிட்டாராம்.. அதாவது, டைரக்டர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி தந்தாலும், நடிகர், நடிகைகளும், தங்களது நடிப்பை வெளிப்படுத்த சொந்தமாக முயற்சிக்க வேண்டும் என்பதிலும் ஊக்கப்படுத்துவார் பாலச்சந்தர்" என பூரித்து சொல்கிறார் கீதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+