மீண்டும் திரும்பி வந்த புகழ்... இந்தமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்..காரணம் இதுதானாம்
சென்னை: குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் மீண்டும் புகழ் வந்துள்ளார்.
புகழுடைய வருகையால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும், காரணத்தை கேட்டு ரசிகர்களுக்கு வருத்தம் தானாம்.

மூன்றாவது சீஸனிலும் களமிறங்கிய புகழ்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த புகழ் மீண்டும் அறிமுகமாகியிருக்கிறார். இவருடைய அறிமுகம் எப்போது இருக்கும் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான். ஆனாலும் கூடவே வருத்தமான செய்தியும் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஒளிபரப்பான சீசன் ஒன்று மட்டும் இரண்டில் புகழின் புகழ் அதிகரித்து இருந்தது.

முகத்தை வெளிக்காட்டிய நிகழ்ச்சி
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். அந்தவகையில் புகழும் ஒருவர். இவருடைய ஆரம்பகட்ட நிகழ்ச்சிகளில் இவர் தன்னுடைய முகத்தை மறைத்து பெண் கெட்டப்பில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகத்தை அனைவரையும் தெரிய வைத்தது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருடைய கேரக்டரையும், முகத்தையும் பல ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர்.

வெள்ளித்திரையிலும் அறிமுகம்
தனக்கு கிடைத்த வாய்ப்பை புகழ் நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இரண்டு சீசன்களில் அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் இவருக்கு சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது காமெடி நடிகராக வெள்ளித்திரையிலும் கால் பதித்திருக்கும் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை என்றாலும் போகப்போக இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமைந்துவிடும் என்று ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மீண்டும் வருகை
தங்களுக்கு மனதிற்குப் பிடித்த பல போட்டியாளர்கள் இந்த மூன்றாவது சீஸனில் அறிமுகமாகும்போது பலருடைய எதிர்பார்ப்புகள் புகழ் இந்த சீசனில் வருவாரா ?? என்று தான் இருந்தது. ஆனால் அவர் வெள்ளித்திரையில் பிசியாக இருப்பதால் வராமல் இருந்து இருந்தாலும், தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கிறார். இதைப் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இவர் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையாம். தான் ஃப்ரீயாக இருக்கும்போது மட்டும் சிறப்பு விருந்தினர்களை போல எப்பவாவது வந்து தலையைக் காட்டிவிட்டு போய் விடுவதாக கூறியிருக்கிறாராம். இதனால் பல ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்களாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications