செல்ல மகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகழ்... அதுக்குள்ள ஒரு வருடம் ஆகிவிட்டதா
சென்னை:புகழ் தற்போது தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
போஸ்ட் பார்த்து குழப்பம் அடைந்த ரசிகர்கள், பின்பு தெளிவாகி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

புகழ் கூறிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் புகழ், தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஒரு போஸ்ட் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்ட் பார்த்ததும் ரசிகர்களுக்கு முதலில் அதிர்ச்சியாகவும், பின்பு மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் போஸ்ட் என்றாலும் இது வித்தியாசமாக இருக்கிறதே என்று பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு புகழ் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக கலந்து கொண்டாலும் தன்னுடைய முகத்தை மறைத்து பெண் வேடமிட்டு தான் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய நிஜ முகத்தை உலகிற்கு காட்டி ரசிகர்களின் நன்மதிப்பையும், அன்பையும் சம்பாதித்துக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் இவர் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் ஏராளம் என்று இவர் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கண்ணீரோடு கூறியிருக்கிறார்.

முதல்முறையாக வாங்கிய கார்
எப்படியும் வாழ்க்கையில் ஜெயித்து விட வேண்டும் என்று இவர் ஒவ்வொரு இடங்களிலும் அவமானங்களையும், போராட்டங்களையும் சந்தித்து தான் இன்று இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்த நிலைக்கும் தற்போது இருக்கும் நிலைக்கு இவருக்கு ஏறுமுகமாக இருந்தாலும் இவர் முதல்முறையாக சம்பாதித்து வாங்கிய கார் இவருக்கு பெரிய அளவில் சந்தோசத்தை கொடுத்திருந்தது. இவர் கார் வாங்கிய நேரத்தில் இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருந்தனர். கருப்பு கலரில் தனக்கு மிகவும் பிடித்த காரை இவர் முதல் முறையாக வாங்கியிருக்கிறார். அதுவும் இவருடைய குடும்பத்திலேயே இவர்தான் கார் வாங்கிய முதல் நபர் என்று கண்கலங்கியபடி தெரிவித்திருந்தார்.

முதல் மகன்
தற்போது அந்த கார் வாங்கி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், இன்று தன்னுடைய காருக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கருப்பன், லைஃப் லாங் பெட்ரோல் போட்டுகிட்டு ரோட்ல ஜாலியா போகணும், அதை பார்த்து நான் சந்தோஷப்படனும்...லவ் யூ கருப்பா என்னுடைய முதல் பையன் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்ததும் பல ரசிகர்கள் அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா?? என்று ஆச்சரியப்பட்டாலும், நீங்கள் இதுபோல இன்னும் நிறைய கார் வாங்க வேண்டும். பெரிய அளவில் உயரத்திற்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் இவருக்கு பல்வேறு வாழ்த்துக்கள் குவித்து வருகிறார்கள்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications