வண்டி வண்டியா வந்துச்சே ஃபீலிங்ஸ்.. "தாக்கப்பட்டாரா ராஜலட்சுமி".. ஜீன்ஸ் போட்டால்? பாடகி ஓபன் டாக்
சென்னை : பொதுவாழ்க்கைக்கு வந்துட்டாலே விமர்சனங்களுக்கும் ஆளாகிவிடுகிறோம். இதனால் நான் உண்மையிலேயே காயப்படுகிறேன்.. ஆனாலும், இதற்கான மனவலிமையையும் சேர்த்துதான் நாம இங்கே வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று பிரபல பின்னணி பாடகி ராஜலட்சுமி வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு, நாட்டுப்புற பாடகியும், புஷ்பா புகழ் பாடகியுமான ராஜலட்சுமி தம்பதியினர் பேட்டி ஒன்றை தந்துள்ளனர்.. இதில் ராஜலட்சுமி பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"என் கணவர் 25 வருஷமாக மக்கள் இசை பாடல்களை பாடிட்டு இருக்கார்.. நான் 20 வருஷமாக பாடிட்டு இருக்கேன். ஆனால், கடந்த 5 வருஷமாகத்தான் எங்கள் முகம் உலகத்துக்கு தெரிந்தது.
அதற்கு முன்பு மற்றவர்களைபோலவே, அவமானங்கள், இழப்பு, வலி, பசி, இதெல்லாம் எங்களுக்கும் இருந்தது. இப்பதான் இந்த நிலைமை மாறியிருக்கிறது. அதற்காக இது திடீர் உயரம் கிடையாது.
முக்கியமான நபர்: எங்களுக்கு கிடைச்ச வாய்ப்புகளுக்கு எல்லாம் காரணம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மேடைதான்.. சூப்பர் சிங்கரை நீக்கிவிட்டு எங்களது வாழ்க்கை, வளர்ச்சியை யோசிக்கவே முடியாது. அப்போதிருந்த சூப்பர் சிங்கர் டைரக்டர் ரஊஃபா மேம் ரொம்ப முக்கியமானவர்.. அவங்கதான் சூப்பர் சிங்கரில் புதுசா ஒரு விஷயத்தை உள்ளே கொண்டு வந்தாங்க.. அதன்படி நாட்டுப்புற கலைஞர்களும் போட்டிக்கு வரட்டும் என்ற விதிமுறையை கொண்டுவந்தார். அத்துடன், அதை நடைமுறைப்படுத்த பல்வேறு சிக்கல்கள் எழுந்தன..
அதையெல்லாம் முறியடித்து, எங்களை போன்றவர்களை அழைத்து அங்கீகாரம் தந்தார். அதனால்தான், புதுக்கோட்டையில் நாங்கள் கட்டிய எங்கள் கனவு இலலத்தை அவர் கையாலயே திறக்க வைத்தோம்.
புஷ்பா2 : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகுதான், சீம ராஜா படத்தில் முதல் முதலாக சினிமா பாட்டு பாடினோம். அப்படித்தான் புஷ்பா 2 படம் வரை வந்துள்ளது. ஃபீலிங்க்ஸ் பாடலை பாடி முடிக்க எனக்கு 3 மணி நேரமானது.. லோ பிச் என்பதால் எனக்கு எளிதாக இருந்தது. ஆனால், தமிழில் பாடினாலும், டங் ட்விஸ்ட்டர் மாதிரிதான் பாடலின் வார்த்தைகள் இருந்தது.. "ஒருவாட்டி, ஒருவாட்டி" என்ற வார்த்தையை வேகமாக பாடும்போது மட்டும், அதை தெளிவாக உச்சரிக்க எனக்கு நேரம் எடுத்தது.
எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வரும். ஆனால், 10 நிமிஷத்தில் சரியாயிடும். எங்கே தொலைத்தோமே அங்கேதான் தேடணும் என்பது மாதிரி, சண்டை போட்டவர்களே சமாதானம் ஆயிடுவோம்.
ராஜலட்சுமி: நான் ஜீன்ஸ் பேன்ட் போடுவதற்கும் நிறைய விமர்சனங்கள் வருகிறது.. ராஜலட்சுமி ரொம்ப பண்றாங்கன்னு சொல்றாங்க.. இதற்கு காரணம், ஒருசிலரை பார்த்ததுமே இவங்க இப்படித்தான் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். இதிலிருந்து திடீரென நாம் மாறம்போது, எதற்காக, ஏன் மாறுகிறார்கள் என்று தெரியாமலேயே அதை கேரக்டருடன் தொடர்புபடுத்தி கொண்டு விமர்சிக்கிறார்கள்.
மார்டன் டிரஸ்ஸில் எனக்கொன்றும் பெரிய மோகம் கிடையாது. என்னைக்காவது அப்படி டிரஸ் போடணும்னு ஆசை வரும். பேன்ட் ஷர்ட் டீசன்ட்டாக இருந்தால் மட்டும் போட்டுப்பேன். அதுவும் வெளிநாடுகளில் ஜாலிக்காக போட்டுக் கொள்கிறேன். ஆனால், அதை பயங்கரமாக விமர்சனம் செய்கிறார்கள்.
விமர்சனங்கள்: பொதுவாழ்க்கைக்கு வந்துட்டாலே விமர்சனங்களுக்கும் ஆளாகிவிடுகிறோம். "தாக்கப்பட்டாரா ராஜலட்சுமி?" அப்படின்ற ரீதியில் எனக்கு விமர்சனங்கள் வருது.. இதனால் நான் உண்மையிலேயே காயப்படுகிறேன்.. ஆனாலும், இதற்கான மனவலிமையையும் சேர்த்துதான் நாம இங்கே வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications