ஸ்ரீதேவியை சொர்க்கத்தில் அரெஸ்ட் பண்ணுவீங்களா? புஷ்பா 2 சக்ஸஸ்.. பிரபலமாவது குற்றமா? டைரக்டர் நறுக்
ஹைதராபாத்: அரசியல்வாதிகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவர்களாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இதுபோன்ற கைது நடவடிக்கை என்று, நடிகர் அல்லு அர்ஜூன் கைதுக்கு, பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் படம் வெளியாவதற்கு முன்தினம் அதாவது கடந்த 4ம் தேதி திரையிடப்பட்டது. படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திடீரென திரண்டுவிட்டனர்.

தியேட்டருக்கு வருகை: இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார்கள்..
இந்த விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண தியேட்டருக்குள் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் தேஜா (9) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் அவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவித்துவிட்டனர்.
கைது நடவடிக்கை: இப்படியொரு சம்பவம் நடந்ததற்கு காரணமே அல்லு அர்ஜுன் தான் என்றுகூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்பின் கைதும் செய்யப்பட்டு ஒரு நாள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார். ஜாமீனில் அவர் வெளிவந்துவிட்டாலும், அவரது கைது நடவடிக்கைக்கு ஏராளமான கண்டனங்கள் எழுந்தன.. திரையுலகிலேயே பல பிரமுகர்கள் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்தவகையில் பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மாவும் இந்த கைதினை வன்மையாக கண்டித்துள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த கைது ஏற்கக் கூடியது அல்ல இதற்கு எதிராக சினிமாயுலகம் ஒன்று திரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷனாஷனம் என்கிற படத்தை இயக்கினேன். அந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் லட்சக்கணக்கான கூட்டம் திரண்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 3 ரசிகர்கள் இறந்துவிட்டார்கள்.
அப்படியென்றால், போலீஸார் சொர்க்கத்திற்கு சென்று இப்போது ஸ்ரீதேவியை கைது செய்யப் போகிறார்களா என்ன? சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் அளவுக்கு அதிகமாக புகழ்பெற்றது ஒரு குற்றமாக கருத முடியுமா? அதிக பிரபலமாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இந்த கைது நடவடிக்கை. அனைத்து நடிகர்களும் அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுவாக போராட வேண்டும்" என்று காட்டமாக ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
பரபரப்பு: அல்லு அர்ஜூனையும், அவரது படங்களையும் தொடர்ந்து விமர்சிக்கக்கூடிய ராம்கோபால் வர்மா இப்படியொரு பரபரப்பு பதிவு போட்டுள்ளது, தென்னிந்திய திரையுலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications