Chandralekha Serial: கொய்யால கட்டின பொண்டாட்டியை இப்படியா ரோட்டில் தள்ளிவிடுவே?
சென்னை: சபரிதான் வேணும்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிகிட்ட லேகா இப்போ, சபரிதான் வேணும்னு நடுத்தெருவுக்கு வந்துட்ட சோகக்கதை சந்திரலேகா சீரியலில் நடந்துகிட்டு இருக்கு.
சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் லேகா புருஷன் சபரியை அம்மா பேச்சை கேட்டுகிட்டு மதிக்காம இருந்த காலம் போயி, இப்போ புருஷன் சபரிதான் வேணும்னு நினைச்சு வந்தால், சபரி வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்க தயாராகிட்டு இருக்கான்.
திரும்பி வந்துட்டேன், திருந்தி வந்திட்டேன்னு சொன்ன லேகாவை ரோட்டில் தள்ளி விடறான் சபரி.

சந்திரலேகா சீரியல்
சன் டிவியில் சந்திரலேகா சீரியல் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதியம் 2:00 மணிக்கு இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. சந்திராவும் லேகாவும் இடம் மாறி வளரும் கசின் சிஸ்டர்ஸ்... இதுதான் கதை.

பணக்காரி லேகா
சந்திராவுக்கு உள்ளதை எல்லாம் தான் தட்டிப் பறித்து வாழ்வதுதான் லேகாவின் குணம். லேகாவின் குணத்தைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்து வாழ்வதுதான் லேகாவின் அம்மா அதாவது சந்திராவை பெத்த அம்மா, லேகாவின் வளர்ப்பு அம்மா குணம். சபரி அப்படித்தான் சந்திராவின் காதலனாகி பின்னர் லேகாவின் கணவனாக வாழ்கிறான்.

சபரியை காதலித்து
சபரியைப் பிடித்து, அவனைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டாலும், அவனைத் தொடவிடாமல் வாழும் லேகாவிடம் இருந்து, கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் வேறு ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்து இருக்கான் சபரி. அவளை கல்யாணம் செய்துக்கலாம் என்கிற முடிவுக்கும் வந்து விடுகிறான்.

லேகாவின் அம்மா
லேகாவின் வளர்ப்பு அம்மா, லேகாவை வேறு கல்யாணம் செய்துக்க சொல்லி, மாப்பிள்ளையும் பார்த்துவிட, சபரியை மறக்க முடியாத லேகா, வளர்ப்பு அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு,பணமும் வேணாம், பணக்கார வாழ்க்கையும் வேணாம், சபரிதான் வேணும் என்று சபரி வீட்டுக்கு வருகிறாள் லேகா.

சபரி ரோட்டில்
சபரி நீதான் வேணும்னு வந்துட்டேன் சபரின்னு சொல்லி புருஷனிடம் அழ. அவனை வீட்டில் வேறு பெண்ணுடன் பார்த்து அதிர்ச்சியாக லேகா. உன்னை வேறு யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்னு சொல்கிறாள். இதை காது குடுத்து கேட்காத சபரி கொஞ்சமும் பாவம் பார்க்காமல் லேகாவைத் தர தர என்று இழுத்து வந்து ரோட்டில் தள்ளி விடுகிறான்.
இத்தனை வருட வாழ்க்கையில் பொண்டாட்டியை கொஞ்சமும் புரிந்துக் கொள்ளத் தெரியாத புருஷன்.. இவன் இத்தனை வருஷம் அவளுடன் என்ன செய்து கொண்டு இருந்திருப்பான்?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications