Rachitha: இரண்டாவது கல்யாணம்.. அதுவும் இந்த மாதத்தில்! வெளிப்படையாக பேசிய ரட்சிதா மகாலட்சுமி!
சென்னை: சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் ரட்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi), சமீபத்தில் அளித்த பேட்டியால் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். காரணம் - அவருக்கு வரும் மே மாதத்தில் கல்யாணம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்தி.
இதற்கு அவர் அளித்த பதில் மிகவும் நேரடியானதும், சற்று கிண்டலாகவும் இருந்தது. "என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே தான் இருக்கும். அதுபோலத்தான் ஒவ்வொரு ஏப்ரல், மே மாதத்திலும் எனக்கு கல்யாணம் என்று பேச்சு வரும். ஆனால் எந்த மே மாதம் என்று மட்டும் யாரும் சொல்ல மாட்டாங்க. எனக்கே தெரியல!" என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

மேலும், "ஏற்கனவே கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாம போய்விட்டது. இப்போ இதுபோல அடிக்கடி பேசுறது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கு. முதலில் அதிர்ச்சியா இருந்தது. இப்போ எல்லாம் பழகி போயிடுச்சு" என்று மிகவும் கூலாக பதிலளித்துள்ளார்.
தினேஷுடன் காதல், திருமணம், பிரிவு
ரட்சிதா, சீரியல் நடிகர் தினேஷ் கோபால் சாமியை காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இருவரும் இணைந்து நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியல் காலத்தில்தான் இவர்களின் காதல் மலர்ந்தது. அந்த சமயத்தில் இவர்களின் திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவே தெரிந்தது. ஆனால் பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். இந்த பிரிவு குறித்து ரட்சிதா இதுவரை எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசியதில்லை. தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் பின்னணி
ரட்சிதா பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தினேஷ் வெளியிலிருந்து அதிக ஆதரவு கொடுத்தார். சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து, வாக்கு கேட்டு போஸ்ட் போட்டதை ரசிகர்கள் மறக்கவில்லை.
ஆனால் ரட்சிதா அந்த சீசனில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு, அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தினேஷ் தானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் இருந்த காலத்தில், அவர் பேசிய சில விஷயங்களுக்கு எதிராக ரட்சிதா சமூக வலைத்தளங்களில் மறைமுகமாக கமெண்ட் செய்து வந்தார்.
அந்த பதிவுகள், "இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை" என்ற மாதிரி இருந்தது. வெளியே வந்த பிறகு தினேஷ் கூட, "ரட்சிதா அவங்க மனசுக்கு ஏற்ற மாதிரி வாழட்டும். நான் யாரையும் தொந்தரவு பண்ண மாட்டேன்" என்று அமைதியாக பதிலளித்தார்.
மீண்டும் திருமணமா
இந்த நிலையில், ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற பேச்சு மீண்டும் கிளம்பியது. குறிப்பாக "மே மாதத்தில் கல்யாணம்" என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
ஆனால் அதற்கு இப்போது அவர் அளித்த பதில் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. எந்த திட்டமும் இல்லை, எந்த தேதியும் இல்லை, இப்போதைக்கு அந்த மாதிரி யோசனையும் இல்லை என்பதையே அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

வேலை பக்கம் பிஸி
தற்போது ரட்சிதா சீரியல் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். கதாபாத்திரத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பதும், தனக்குப் பிடித்த கதைகளில் மட்டும் நடிக்கிறார் என்பதும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறும் விஷயம்.
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அதிகம் பேசாமல், வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே இப்போது அவரது மனநிலை போல தெரிகிறது.
இனி உண்மையிலேயே அவர் வாழ்க்கையில் புதிய முடிவு எடுப்பாரா? இல்லையா? என்பது காலமே சொல்ல வேண்டும். ஆனால் தற்போது அவர் மிகவும் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் தனது வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார் என்பது மட்டும் உறுதி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications