சித்ரா பத்தி அப்படிப் பேசாதீங்க.. கெஞ்சிக் கேட்கும் ரக்ஷிதா

Subscribe to Oneindia Tamil

ஒருவர் இருந்தவரைக்கும் அவரைப் பற்றி அதிகமாக பேசாத பலரும் அவர் இல்லை என்றதும் பல்வேறு பேச்சுக்களை பேசுவது வழக்கம்தான்.

அந்த மாதிரி தான் சித்ரா இருந்த வரைக்கும் இந்த அளவிற்கு அவரை பற்றி ஒருவர் கூட பேசியதில்லை . ஆனால் தற்போது அவர் இல்லை என்று ஆன பிறகு அவரைப் பற்றி விதவிதமாக பேசுகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி பேசியிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லை இனி இல்லை

முல்லை இனி இல்லை

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் சித்ரா நடித்திருந்தாலும் சின்னத்திரை ரசிகர்களிடமும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகர்களையும் நெருங்கிய தோழியாக தான் வலம் வந்துகொண்டிருந்தார். அவருக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் இவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தான் இருந்து வந்தார் .

ரக்ஷிதா வீடியோ

ரக்ஷிதா வீடியோ

அதே மாதிரி தான் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மகா வாக நடித்துக்கொண்டிருக்கும் ரக்ஷிதாவும் சரவணன் மீனாட்சியில் மீனாட்சியாக கலக்கிக் கொண்டிருந்த காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் சிம்பிளாக தான் இருந்து வருகிறார்.

சித்ராவின் தோழி

சித்ராவின் தோழி

இவர்கள் இருவரும் தோழிகளாக இருந்தாலும் தற்போது சித்ராவை பற்றி பல்வேறு கருத்துக்கள் புதுசு புதுசாக ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து கோபத்திலும் கவலையிலும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வீடியோ போட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தப்பா பேசாதீங்க

தப்பா பேசாதீங்க

அதுவும் சித்ராவை பற்றி அவர் இல்லாத இந்த நேரத்தில் அவர் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவருடைய இனிமையான நினைவுகளோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ட்ரை பண்ணி கொண்டு இருக்கும்போது அவரைப்பற்றி விதவிதமாக கதைகளை கட்டிக்கொண்டிருக்கும் சிலருக்கு மட்டும்தான் இந்த வீடியோ என்று அறிவித்திருக்கிறார் ரக்ஷிதா.

இதுதான் பலரின் நிலைமை

இதுதான் பலரின் நிலைமை

இதில் இருக்கும் பல பேரின் நிலைமை இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. வெளியே சிரித்துக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் ஒருவிதத்தில் பயந்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .ஒரு விஷயத்தை சிரித்து சந்தோஷமாக வெளியே பேசினால் இவர் ஓவராக சீன் போடுகிறார் என்று கூறுகிறார்கள் .அதுவே ஒரு கஷ்டமான விஷயத்திலும் கவலையை வெளியே கூறினால் இவர் நடிக்கிறார் என்று கூறிவிடுகிறார்கள்.

தப்புத் தப்பா பேசக் கூடாது

தப்புத் தப்பா பேசக் கூடாது

இதில் என்ன பண்ணுவது என்றே தெரியாமல் தான் நடிகைகளின் வாழ்க்கை இருந்து கொண்டிருக்கிறது. அதனால் தயவு செய்து நடிகைகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நீங்களாக முடிவு செய்து கொண்டு ஒவ்வொரு வதந்தியாக பரப்பாதீர்கள் . சித்ரா எவ்வளவு ஒரு தைரியமான பொண்ணு என்பது எல்லோருக்குமே தெரியும்.

கண்ணீர் மல்க கோரிக்கை

கண்ணீர் மல்க கோரிக்கை

அவ்வளவு தைரியமான பொண்ணுக்கு இந்த நிலைமை என்றால் பல பெண்கள் இந்த அளவுக்கு போல்ட்னஸ் இல்லாமல் யாருக்கு பின்னாடி தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்போ அவர்களின் நிலைமை என்ன என்று சொல்லமுடியாத அளவில் தான் தற்போது நிலைமை இருக்கிறது என்று கண்ணீர் மல்க தயவுசெய்து சித்ராவை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கூறியிருக்கிறார் ரக்ஷிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+