சின்மயி நல்லாதானே பாடுறார்.. ஏன் தடை போட்டீங்க.. கோபத்தில் ராதாரவி சொன்ன பதில்
சென்னை: பாடகி சின்மயி "தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடிய முத்தமழை பாடல் தான் இப்போது சோசியல் மீடியா எங்கும் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. ஆனால் பாடகி சின்மயி பாடுவதற்கு தடை விதித்தது குறித்து நடிகர் ராதாரவியிடம் கேள்வி கேட்டபோது அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படுகிறது.
90ஸ் கிட்ஸ்களின் பல ஹிட் பாடல்களை பாடிய சின்மயி பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் அந்த தக் லைஃப் திரைப்படத்தில் இடம் பெற்ற முத்தமழை பாடலை சின்மயி பாடி இருந்தார். அந்த பாடலின் ஒரிஜினலை பாடகி தீ தான் பாடியிருந்தார். ஆனால் அவர் ஊரில் இல்லாத காரணத்தால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் அதற்கு பதிலாக சின்மயி அந்த பாடலை பாடி இருந்தார்.

சின்மயி பாட தடை
இந்தப் பாடலை கேட்டதும் ரசிகர்கள் இவ்வளவு அருமையான குரலை ஏன் சினிமாவில் சமீபகால ஏன் தடை செய்து வைத்து இருக்கிறார்கள் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இது குறித்து நடிகர சங்கம் சார்பாக சின்மயி டப்பிங் மற்றும் பாடுவதற்கு தடை விதித்த ராதாரவியிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ராதா ரவி, "சின்மயி ஆண்டு சந்தா சரியாக கட்டவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் எங்களிடம் எதுவும் பேசாமல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். அங்கே சென்று நான் வாழ்நாள் முழுக்க சந்தாவை கட்டி விட்டேன் என்று பொய் சொன்னார் இதனால் தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது" என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
சின்மயிக்கு சப்போர்ட்
தொடர்ந்து ராதாரவி இடம் நீங்கள் ஒரு மூத்த நடிகர் சின்ன பெண் சின்மயி ஏதோ தவறு செய்துவிட்டால் அவரை அழைத்து எதற்கு தேவையே இல்லாத பிரச்சனை சந்தா கட்டு என்று சொல்லி இருக்கலாமே? அதை விட்டுவிட்டு என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் வாழவே முடியாது என்று ஒருவரின் திறமையை அடியோடு அழிப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
ராதா ரவி பேட்டி
அதற்கு ராதாரவி நீங்கள் நன்றாக கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் இது ஒரு தேவையில்லாத வேஸ்ட் டாபிக் இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கோபமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானதை தொடர்ந்து சின்மயிக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
சின்மயியின் ஹிட் பாடல்
தமிழ் சினிமாவில் ஒருவரை காலி பண்ணுவதற்காக பலர் திரண்டு சின்மயி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள் என்றும் கருத்து கூறி வருகிறார்கள். "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்த சின்மயின் குரலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய குரல் இப்போது பல வருடங்களுக்கு மீண்டும் ட்ரண்டாகி கொண்டிருக்கும் நிலையில் சின்மயி வர்ஷன் வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்பி கொண்டிருக்கிறார்கள்.
சின்மயி டப்பிங் யூனியன் பிரச்சனை
அது மட்டுமல்லாமல் டப்பிங் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. லியோ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்ததற்காக எப்படி அவரோட குரல் கொடுக்கலாம் என்று சின்மயிக்கு டப்பிங் யூனியனிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த பிரச்சனைக்கு காரணம் டப்பிங் யூனியனுக்கு ஆண்டு சந்தா என்ற அடிப்படையில் ரூபாய் 250 கட்டணுமாம். ஆனால் சிம்மயி அதை கட்டவில்லையாம். அதனால் அவரை டப்பிங் யூனியனில் இருந்து தூக்கி விட்டார்கள் என்று கூறப்படுகிறது.
ராதாரவி விளக்கம்
இது பற்றி ஏற்கனவே ராதாரவி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது அவர் பேசும்போது, சின்மயி கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறார். ஏராளமான பாடல்களையும் பாடி இருக்கிறார். அவர் மூலமாக டப்பிங் யூனியனுக்கு 10 சதவீதம் கமிஷன் வருகிறது. அதனால் லட்சம் லட்சமாக டப்பிங் யூனியனுக்கு வருமானம் வருகிறது. இப்படி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் சின்மயினால் ஒரு 250 ரூபாய் கட்ட முடியாதா? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
டப்பிங் யூனியன் பிரச்சனை
ஆனால் அதற்கு சின்மயி தரப்பில் இருந்து அப்போது கொடுத்த விளக்கத்தில் ஸ்ருதிஹாசனுக்கு டப்பிங் யூனியன் இருந்து கட்டுகிறார்கள், விஜய்க்கும் கட்டுகிறார்கள், பாடகர் கார்த்திக்கு கட்டுகிறார்கள் எனக்கு மட்டும் ஏன் கட்டவில்லை? என்று கேள்வி கேட்டிருந்தார். இது பற்றி இப்போது ராதாரவி பேசும்போது, " டப்பிங் யூனியன் பற்றி உங்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை." அதைப்பற்றி பேச வேண்டும் என்றால் ஒன்றரை வருஷம் ஆகும் என்று அந்த பேட்டியை பாதியிலே ராதாரவி முடித்துக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications