குட்டியா இருந்தாப்படி.. இப்ப அம்மாவே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு வளர்ந்தாச்சு!
சென்னை: காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுது பாருங்க.. சரத்குமார் - ராதிகாவின் செல்லப் பிள்ளை ராகுல் இப்போது வளர்ந்து அம்மாவே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு பெரிய ஆளாய்ட்டுருங்க.
ராதிகா சரத்குமார் மகன் ராகுல். ராகுலுக்கு நேற்று பிறந்தநாள். டீன் ஏஜ் பாய். அவருடைய அம்மாவான ராதிகா சரத்குமார் அண்ணாந்து பார்த்து தான் கேக் ஊட்டியுள்ளார் அந்தளவுக்கு பெரிய பையனா வளர்ந்தாச்சு.
மகனை நிமிர்ந்து பார்த்து உச்சி முகர்ந்து பெருமிதத்தை முகத்தில் வெளிப்படுத்தி பூரித்தபடி காட்சி தரும் ராதிகாவின் புகைப்படம் வைரலாகி விட்டது. மகன் வளர்ச்சியில் முதல் பெருமிதம் எப்பவுமே தாய்க்குதானே.

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகை ஆவார். அவர் சித்தி, செல்வி மற்றும் அரசி போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்த ராடான் மீடியா ஒர்க்ஸ் இன் நிறுவனர் . பெண்களுக்கு அருமையான முன்மாதிரியாக இருக்கிறார். மறைந்த தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான எம் ஆர் ராதாவின் மகள். குடும்பமே ஒரு கலைக் குடும்பம்

சூப்பர் வளர்ச்சி
நடிகர் சரத்குமாரும் ராதிகாவும் காதலித்து மணம் புரிந்து கொண்டனர். இருவருக்குமே இது மறுமணம்தான். ஆனால் நல்லதொரு ஜோடியாக சூப்பர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். 2004இல் இவர்களுக்கு ராகுல் பிறந்தார். குட்டி வயசுல பப்ளிமாஸ் மாதிரி புசுபுசுன்னு இருந்த ராகுல் இப்ப ஆளே மாறிவிட்டார். அவங்க அப்பா அம்மாவையே மிஞ்சி விடுவார் போல அப்பாவும் அம்மாவும் நடிகர்களாக மின்னிக் கொண்டிருக்கும் போது அவர் பாப் பாடகராக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

நாயகன் உதயமாகிறான்
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வரும் நிலையில் தற்போது சரத்குமார் ராதிகாவின் செல்ல மகன் ராகுல் சரத்குமார் தன்னுடைய பதினாறு வயதிலேயே பாப் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு நாயகன் உதயமாகிறான் பாடல் வேற லெவல்ல இருந்தது. மேலும் அவர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடியுள்ள ரா சன் டேட் ஆப் என்ற பாடலை அவரை எழுதி பாடியுள்ளார். யூடிபில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை பார்த்து விட்டு பலரும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராதிகா பெருமிதம்
நடிகை ராதிகா மற்றும் அவருடைய கணவர் சரத்குமார் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து நடித்த வானம் கொட்டட்டும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து வரலட்சுமி ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து பராசக்தி என்கிற படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது ராதிகா சரத்குமார் இணைந்து தன்னுடைய மகன் ராகுல் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.

ராதிகா முகம் கொள்ளா பெருமிதம்
இந்த போட்டோக்களை எல்லாம் ராதிகா சரத்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கலைஞரின் கையில் இருக்கும்போது குழந்தையாக இருந்த நீ இன்று உன் தாயே உன்னை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாயா என்று வாழ்த்தி கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் ராகுலுக்கு வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் சொல்லியிருக்கிறார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications