மகன் ராகுல் பற்றி சந்தோஷத்தை பகிர்ந்த ராதிகா.. 21 வருஷம் ஆகிடுச்சு, வரலட்சுமி கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய மகனோடு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார். அதேபோல வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
நடிகர் சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால் சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராதிகாவிற்கும் சரத்துக்குமாருக்கும் ராகுல் என்ற மகன் இருக்கிறார். ஏற்கனவே ராதிகாவிற்கு திருமணம் முடிந்து ரயான் என்ற மகள் இருக்கும் நிலையில் சரத்குமார் தான் ராதிகாவின் முதல் மகள் திருமணத்தையும் முன் நின்று நடத்தி வைத்திருந்தார்.

அதுபோல ஆரம்பத்தில் வரலட்சுமி ராதிகாவுடன் பேசாமல் தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். வரலட்சுமியின் திருமணத்தை ராதிகா தான் முன்நின்று நடத்தி வைத்திருந்தார். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவும் நடிகை தான். சமீபத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல வரலட்சுமி போடா போடி திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது தமிழை விடவும் மற்ற மொழி திரைப்படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று நடிகை ராதிகா தன்னுடைய மகன் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு அவரோடு எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருந்தார்.

அதேபோல வரலட்சுமி தன்னுடைய தம்பியான ராகுல் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து இருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் ராகுல் கால் நீட்டி பெட்டில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த புகைப்படத்தில் முதல் புகைப்படம் சரியாக இல்லை என்று ராகுல் ரொம்ப பீல் பண்ணி விட்டான் இப்போ அவன் 21 வயதில் அடி எடுத்து வைத்திருக்கிறான் அதனால் அவனுக்கு டீசன்டான ஒரு புகைப்படத்தை அப்லோட் பண்றேன் என்று தன்னுடைய கணவர் மற்றும் தன்னோடு ராகுல் இருக்கும் புகைப்படத்தை வரலட்சுமி பகிர்ந்து இருக்கிறார்.
அதுபோல ராதிகாவின் முதல் மகள் ரயான் தன்னுடைய தம்பியின் சிறுவயது முதல் இப்போது உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரை அனைத்தையும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். சரத்குமார் மற்றும் ராதிகாவின் மகன் ராகுல் ஹீரோ போல மாறிவிட்டார், சினிமாவிற்கு அடுத்த கதாநாயகன் ரெடி என்று சிலர் கமெண்ட் கொடுத்து இருக்கின்றனர்.
ராதிகா வெளியிட்ட பதிவில் "எங்கள் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாங்கள் அனைவரும் உன் மீது அன்பை தவிர வேறொன்றையும் கொண்டு இருக்கவில்லை. எப்போதும் உனக்கு அன்பு தான் கிடைக்கும். ஆனால் நான் உன்னை அடிக்கடி கொடுமைப்படுத்துவேன்" என்று ராதிகா அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications