மோகன்லால் எனக்கு போன் பண்ணி கேட்டாரு! ஆனால் நான் அதை சொல்ல விரும்பல.. வெளிப்படையாக பேசிய ராதிகா
சென்னை: மலையாள சினிமா உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் நடிகை ராதிகா தொடர்ந்து பேட்டி கொடுத்து சினிமா உலகில் நடக்கும் அவலங்கள் குறித்து பேசி வருகிறார். அதில் மலையாள சினிமாவில் தான் நடிக்கும் போது கேரவனில் கேமரா வைத்தது குறித்து பேசி இருந்த நிலையில் அதற்காக நடிகர் மோகன்லால் தனக்கு போன் செய்து பேசியதாக ராதிகா பேசியிருக்கிறார்.
அட்ஜஸ்மென்ட் பிரச்சனை எல்லா இடங்களிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மலையாள சினிமா நடிகைகளுக்கு வாய்ப்புக்காக பலர் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனைகளை சந்திப்பதாக இரண்டு வாரத்திற்கு முன்பு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை கூறி இருந்தது.

இந்த அறிக்கையை வெளியான பிறகு பல நடிகைகள் தைரியமாக தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள், அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதனால் பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் சினிமா நடிகைகளும் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் இந்த பிரச்சனை நடக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
அதில் நடிகை ராதிகா தான் மலையாள சினிமாவில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சூட்டிங் முடித்துவிட்டு நான் நடந்து வந்து கொண்டிருந்தபோது சிலர் அங்கு கும்பலாக இருந்து செல்போனில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள், அந்த நேரத்தில் அவர்கள் பேசியது எனக்கு சரியாக புரியவில்லை எனக்கு அவர்களின் மொழி அதிகமாக தெரியாது என்பதால் அவர்கள் பேசியது புரியவில்லை.

ஆனாலும் அங்கு இருந்த தமிழ் நபர் ஒருவரை கூப்பிட்டு அவரிடம் விசாரித்த போது பல நடிகைகள் கேரவேனில் டிரஸ் மாற்றும் வீடியோவை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார். உடனே நான் அங்கிருந்தவர்களிடம் சண்டை போட்டு அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன் என்று ராதிகா கூறி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ் சினிமாவில் கேரவன் வாடகைக்கு விடும் சங்கத்தினர் இது தமிழ் சினிமாவில் நடக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் நடிகை ராதிகாவிடம் இது பற்றி ஹேமா கமிட்டியில் இருந்து போன் செய்து விசாரித்ததாகவும் செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் இது குறித்து ராதிகா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
அப்போது நான் கேரவன் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசியதும் நடிகர் மோகன்லால் எனக்கு போன் செய்து இது என் செட்டில் நடந்ததா? என்று கேட்டாரு. நான் அப்போது அவரிடம் சார் நான் பேர் சொல்ல விரும்பல... அது நீங்களோ வேற யாரோன்னு நான் சொல்லல. ஆனா அந்த செட்டில் பெரிய ஆளுங்கன்னு யாரும் இல்ல. நான் நடந்து போகும்போது பார்க்கும்போது அது தவறான வீடியோ என்று எனக்கு தெரிந்தது.
ஆனால் அவங்க பாஷை எனக்கு புரியாததால் தமிழ் தெரிஞ்ச நபரை கூப்பிட்டு திட்டி அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். அது போல எனக்கு நான்கு நாட்களுக்கு முன்பு கமிட்டியில் இருந்து கால் செஞ்சாங்க. அப்போ நான் அவர்களிடம் நீங்க பயங்கரமா வேலைகள் செய்றீங்க என்று என்னுடைய பாராட்டை முதலில் சொன்னேன்.
அதற்குப் பிறகு அவர்கள் கேரவன் பிரச்சனை பற்றி கேட்டாங்க, அப்போ ஆமா அப்படி நடந்தது என்று சொன்னேன். ஆனால் நான் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் அவர்கள் என்னை இன்வெஸ்டிகேஷன் செய்யவில்லை. நான் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தால் தானே இன்வெஸ்டிகேஷன் பண்ணுவாங்க.. ஆனால் இது நடந்துச்சா என்று கிளாரிபை பண்ணுனாங்க. ஆமாம் என்று சொன்னேன் அவ்வளவுதான், என்று அந்த பேட்டியில் ராதிகா பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications