குலதெய்வத்தைப் போய் பார்த்து விட்டு வந்த ராதிகா.. மனசு நிறைஞ்சுருச்சு.. 43 வருஷமாச்சாம்!
சென்னை :கலையரசி .. இந்த பட்டத்துக்கு முழுக்க முழுக்கப் பொருத்தமானவர்தான் ராதிகா. அந்த அளவுக்கு அவரது நடிப்புக்கு இணையான ஒரு நடிகையை இதுவரை காண முடியவில்லை.
இப்படிப்பட்ட ராதிகா சினிமாவில் 43 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. நேற்றுதான் கிழக்கே போகும் ரயில் படம் வந்தது போலஇருக்கிறது. ஆனால் இன்று 43 வருடத்தை தொட்டு விட்டார் ராதிகா.
ஒரு நடிகையாக ரொம்பவே முழுமையான ஒருவர்தான் ராதிகா. சினிமாவில் விதம் விதமான கேரக்டர்களில் நடித்துள்ள ராதிகா சின்னத்திரையிலும் தனது அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஆங்கிலமே சுவாசம்
ராதிகா நடிக்க வந்தபோது சரியாக தமிழில் கூட பேசத் தெரியாதாம். எல்லாமே நுனி நாக்கு ஆங்கிலம்தான். டயலாக்கைக் கூட ஆங்கிலத்தில்தான் எழுதி வைத்துப் பேசுவாராம். காரணம், லண்டனில் வளர்ந்ததால் அவருக்கு தமிழை விட ஆங்கிலமே நல்லா வருமாம். கோபப்பட்டால் கூட ஆங்கிலத்தில்தான் திட்டித் தீர்ப்பாராம். இவர் திட்டுவது குறித்து இயக்குநர் கே. பாக்யராஜ் கூட பலமுறை சொல்லி சிரித்துள்ளார். அந்த அளவுக்கு ஷார்ட் டெம்பரும் கூட ராதிகாவுக்கு அதிகம்தான்.

சீரியல்களிலும் சகாப்தம் படைச்சாச்சு
இப்படிப்பட்ட ராதிகா ஹீரோயினாக, அமைதியான பெண்ணாக, டான்ஸராக, பாடகியாக, சண்டைக் காரியாக என பல அவதாரம் பூண்டுள்ளார் சினிமாவில். ஏன் ஜீன்ஸ் படத்தில் வில்லத்தனமாக கூட அசத்தியிருப்பார். யாராலும் மறக்க முடியாத சூப்பரான கேரக்டர் இது. அதேபோலத்தான் இவர் சின்னத்திரையிலும் அசத்திக் கொண்டிருக்கிறார். இவரது சின்னத்திரை நடிப்புக்கு அடிமையாக இருப்போர் ஏராளம் ஏராளம். விதம் விதமான கேரக்டர்களில் தொடர்ந்து டிவி சீரியல்களில் சகாப்தம் படைத்து வருகிறார் ராதிகா.

அடுத்தடுத்து பிரபலமான சீரியல்கள்
இவரது ரடான் டிவி நிறுவனம் பல பிரபலமான சீரியல்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது. சித்தி, செல்லமே, அரசி, அண்ணாமலை, வாணி ராணி என இந்த லிஸ்ட் ரொம்பவே பெரியது. இதில் ராதிகா நடிக்காத சீரியல்களை எண்ணி விடலாம். அந்த அளவுக்கு எல்லா சீரியல்களிலும் ராதிகாவின் முத்திரை ரொம்பவே அழுத்தமாகவே இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இப்போது வரையிலும் சீரியல்களை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ராதிகா.

சினிமாவில் 43 வருடங்கள் நிறைவு
இந்த நிலையில் தனது 43வது வருடத்தையொட்டி குல தெய்வம் கோவிலுக்குப் போய் வந்துள்ளார் ராதிகா. குல தெய்வம் கோவிலுக்குப் போவது என்பது எல்லோருக்குமே ரொம்பப் பிடித்தமானதுதான். மனதுருக போய் உட்கார்ந்து வேண்டிக் கொண்டு வரும்போது கிடைக்கும் நிம்மதியும், அமைதியும் வேறு எதிலும் கிடைக்காது. அந்த அளவுக்கு நமக்கு மிக மிக நெருக்கமான விஷயம் என்றால் அது குல தெய்வம் கோவில்தான். அதை அனுபவப்பூர்வமாக தனது டிவிட்டரில் பதிந்துள்ளார் ராதிகா.

குலதெய்வம் கோவிலுக்கு விசிட் அடித்த ராதிகா
குல தெய்வம் கோவிலுக்குப் போன ராதிகா அங்கு மனசார சாமி கும்பிட்டுள்ளார். காமாட்சி அம்மன்தான் இவரது குல தெய்வமாம். அந்தக் கோவிலுக்குப் போய் மனசார சாமி கும்பிட்ட அவர் சிறிது நேரம் அங்கு அமர்ந்துள்ளார். கோவிலுக்கு வந்த பலரும் ராதிகா வந்திருப்பதை அறிந்து வந்து பேசியுள்ளனர். அவர்களிடம் நலம் விசாரித்த ராதிகா ரொம்ப இயல்பாக பேசிக் கொண்டிருந்தார். இந்த அனுபவத்தை அவர் டிவிட்டரில் போட்டு மகிழ்ந்துள்ளார்.

ராதிகாவின் மனசெல்லாம் மகிழ்ச்சி
ராதிகா குலதெய்வம் கோவிலுக்குப் போனதைப் பார்த்து பாராட்டி வரும் அவரது ரசிகர்கள், அவருக்கு 43வது வருட வாழ்த்துகளையும் கூடவே அள்ளித் தெளித்துக் கொண்டுள்ளனர். ராதிகாம்மா, அக்கா என்று உரிமையுடனும், பாசத்துடனும் பேசி வாழ்த்துகளை ரசிகர்கள் அழகாக குவித்து வருகின்றனர். வழக்கம் போல அனைத்து வாழ்த்துகளையும் அமைதிப் புன்னகையுடன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார் ராதிகா. ராதிகா தற்போது சிம்புவுடன், கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
இந்த விசிட் குறித்து ராதிகா போட்டுள்ள போஸ்ட்டில், குல தெய்வம் கோவிலுக்குப் போய் விட்டு வருவது ரொம்ப முக்கியமானது, விசேஷமானது. அதற்கு ஆசிர்வாதம் வேண்டும். அது எனக்கு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. 4 3வருடங்கள் சினிமாவில் முடித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றி சொல்லிக் கொள்கிறேன். சினிமாவில் தொடர்ந்து நீடித்து வருவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி சிலாகித்துள்ளார் ராதிகா சரத்குமார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications