ஒரே ப்ரமோவின் ஜீ தமிழின் மொத்த சீரியல் கதையும் ரிவில்.. கங்கா தேவியாக மிரட்டிய ராதிகா தான் அல்டிமேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரை ரசிகர்களை தினமும் டிவி முன் அமர வைத்து விறுவிறுப்பாக கதைகளை நகர்த்தி வரும் ஜீ தமிழ், தற்போது வெளியிட்டுள்ள ஒரு புதிய ப்ரோமோவால் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. சாதாரண ப்ரோமோவாக இல்லாமல், மெகா ஸ்டார் ராதிகா சரத்குமார் கங்கா தேவியாக அவதாரம் எடுத்து, ஜீ தமிழின் முன்னணி சீரியல்களின் எதிர்காலத்தை கணித்து சொல்லும் கான்செப்டில் இந்த ப்ரோமோ உருவாக்கப்பட்டுள்ளது.

"7 டூ 10... இனி நம்ம டைம் செட்!" என்ற ஒரு வரியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ப்ரோமோ தற்போது சீரியல் ரசிகர்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Radhika ZeeTamil

கங்கா தேவியாக ராதிகா

ப்ரோமோ தொடங்கியதும், ஆன்மீக தோற்றத்தில் கங்கா தேவியாக தோன்றும் ராதிகா சரத்குமார், ஜீ தமிழின் பிரபல கதாநாயகிகளான இந்து, மகா, அயலி மற்றும் மீனாட்சி ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி திருப்பங்களை ஒவ்வொன்றாக கணித்து சொல்கிறார். அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்துவை சிக்கவைக்கும் ரகசியம்

'சின்னஞ்சிறு கிளியே' தொடரில் இந்துவின் வாழ்க்கை ஏற்கனவே பல பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ள நிலையில், இனி அவள் செய்யாத ஒரு தவறுக்காக பழியை சுமக்க நேரிடப்போகிறதாம். "தேவையில்லாத பழி... சுமக்கக் கூடாத ரகசியம்..." என்ற கங்கா தேவியின் வார்த்தைகள், இந்துவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப்போகும் ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது. அந்த ரகசியம் என்ன? அதிலிருந்து இந்து எப்படி மீளப்போகிறாள்? என்ற கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்துள்ளன.

மகாவின் வாழ்க்கையில் தர்மசங்கடம்

'திருமாங்கல்யம்' தொடரின் நாயகியான மகா, கணவன் திரு மீது உயிரையே வைத்திருக்கும் பெண். ஆனால் திவ்யாவுக்காக பெரிய முடிவெடுக்க தயாராக இருக்கும் மகாவின் வாழ்க்கையில் இன்னும் பெரிய சோதனை காத்திருக்கிறதாம். "நீ உயிரா நினைக்கும் ஒரு உசுருக்கும்... உன்னை உயிரா நினைக்கும் ஒரு உசுருக்கும் நடுவுலதான் உன் வாழ்க்கை..." என்ற வசனம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

காதல், குடும்பம், கடமை என மூன்று பாதைகளில் மகா எந்த பாதையை தேர்வு செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அயலியை அழிக்க வரும் புதிய வில்லன்

'அயலி' தொடரில் சிவா - அயலி உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், தற்போது அவர்களின் வாழ்க்கையை சிதைக்க புதிய வில்லன் வர்மா களமிறங்க உள்ளார். போலியாக தொடங்கிய உறவு, உண்மையான பாசமாக மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், "உன்னை அழிக்க அசுரன் வர்றான்" என்று கங்கா தேவி எச்சரிக்கை விடுப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வர்மாவின் வருகை அயலியின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

வெடிக்கப்போகும் குண்டு

'வாகை சூடவா' தொடரில் மீனாட்சியின் திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், "நீ எதிர்பார்க்காத ஒரு கல்யாணம் நடக்கப்போகுது... அது மொத்த குடும்பத்தையும் தலைகீழாக மாற்றப்போகுது" என்ற ராதிகாவின் வார்த்தை ரசிகர்களை உச்சக்கட்ட ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது. மணமேடையில் என்ன நடக்கப்போகிறது? யாருடைய வாழ்க்கை மாறப்போகிறது? என்ற கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகின்றன.

7 டூ 10 இனி நம்ம டைம் செட்

ப்ரோமோவின் இறுதியில் ராதிகா தனது வழக்கமான கம்பீரத்துடன் "7 டூ 10... இனி நம்ம டைம் செட்!" என்று கூறும் காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் ஜீ தமிழின் மாலை நேர சீரியல்கள் அனைத்தும் அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு செல்லப்போகின்றன என்பது தெளிவாகியுள்ளது.

ஒரே ப்ரோமோவில் நான்கு சீரியல்களின் முக்கிய திருப்பங்களை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கும் ஜீ தமிழ், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ப்ரோமோவுக்கே இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், வரும் நாட்களில் இந்த தொடர்கள் TRP-யில் புதிய சாதனைகளை படைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சீரியல் ரசிகர்களுக்கு இனி மாலை 7 மணி முதல் 10 மணி வரை உண்மையிலேயே "டைம் செட்" ஆகப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+