அப்பா இல்ல அண்ணா, படிக்கணும்! உதவி கேட்ட ஹரிஹரன்.. வீட்டிற்கே வந்த லாரன்ஸ்.. கடைசியில் நெகிழ்ச்சி
சென்னை: நடிகராகவும், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் சமூக ஆர்வலர் என்று பல முகத்தைக் கொண்ட ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டு ஒரு மாணவன் சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அந்த மாணவனின் வீட்டிற்கே சென்று ராகவா லாரன்ஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அந்த மாணவனின் படிப்பு செலவை இனி நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று வீட்டிற்கு சென்று லாரன்ஸ் சொல்ல அந்த மாணவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கண் கலங்க நன்றி கூறி இருக்கிறார்.

அந்த வகையில் சமூக வலைதளத்தை திறந்தாலே லாரன்ஸ் செய்யும் உதவிகள் வீடியோ தான் இப்போது இணையத்தில் குவிந்து கொண்டிருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி ராகவா லாரன்ஸ் பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக உதவி கொண்டிருந்த லாரன்ஸ் அதைத்தொடர்ந்து முதியோரின் அடிப்படை வசதிகள், கணவனை இழந்த பெண்களுக்கு உதவிகள் என்று அடுத்தடுத்து தன்னுடைய உதவிகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது லாரன்ஸ் "மாற்றம்" என்ற ஒரு சேவையை தொடங்கி இருக்கிறார். அந்த சேவை மூலம் கிராமப்புறத்தில் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி கொண்டிருக்கிறார். தன்னிடம் வரும் மனுக்களுக்கு தகுந்த உதவிகளை செய்து வரும் லாரன்ஸ் எளிமையின் சிகரமாக இருப்பதை பார்த்து பலரும் பாராட்டி அவரை வாழ்த்தி வருகிறார்கள்.
சில தினங்களாக அவருடைய வீடியோஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் கிராமத்தில் ஏழைகளுக்கு டிராக்டர் கொடுக்க போன லாரன்ஸ் மாஸ்டர் ஒரு தோட்டத்தில் சாப்பிட்டு விட்டு புல் தரையில் ஒரு துணியை மட்டும் விரித்து அதில் படுத்து தூங்குவதை பார்த்து பலர் வியந்து போய் விட்டார்கள். நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என்று பல திறமைகள் வைத்தும் கஷ்டப்பட்டு எவ்வளவு பணம் சம்பாதிச்சும் இவருடைய எளிமை இப்போது பலரையும் இவரை போலவே சேவை செய்ய தூண்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹரிஹரன் என்ற ஒரு மாணவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தன்னுடைய தந்தை சிலர் மாதங்களுக்கு முன்பு இறந்து போய்விட்டார். அம்மா மட்டும்தான் எங்களுக்கு இருக்கிறார். அவரும் ஏழ்மையில் இருப்பதால் நானும் என்னுடைய தம்பிகளும் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறோம்.
நீங்க என்னை படிக்க வைத்தீர்கள் என்றால் நான் கலெக்டர் ஆகி உங்களைப் போல பலருக்கு உதவி செய்வோன். நான் படித்தால் என்னுடைய தம்பி மற்றும் என்னுடைய குடும்பத்தை நானே காப்பாற்றிக் கொள்வேன் என்றும் கண் கலங்க லாரன்ஸிடம் வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்த லாரன்ஸ் அந்த மாணவனின் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் லாரன்ஸ் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அப்பா இல்லை என்று உதவி கேட்ட ஹரிஹரனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுப்போமா? என்று கேட்டிருக்கிறார். அதை தொடர்ந்து லாரன்ஸ் அந்த மாணவனின் வீட்டிற்க்கே சென்று அவரை நேரடியாக சந்தித்து தந்தை இறப்பு குறித்து ஆறுதல் கூறி அந்த மாணவனின் படிப்பு செலவை தானே ஏற்றுக்கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.
அதைக் கேட்டு அவருடைய அம்மா மற்றும் பாட்டி சுற்றி இருந்தவர்கள் என எல்லோரும் கண்கலங்கி இருக்கின்றனர். இந்த வீடியோ பார்க்கும் ரசிகர்களையும் கண்கலங்க வைத்திருக்கிறது. தனக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன லாரன்ஸ்க்கு கண்கலங்க அந்த மாணவனும் நன்றி கூறியிருக்கிறார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications