சும்மாவே பலமுறை பண்ணுவாங்க.. ராஜ் டிவி கையில் எடுக்கும்.. கவியரசு கண்ணதாசன்... என்றென்றும் வாலி!
சென்னை: வழக்கமாகவே ராஜ் டிவியில் ஒரு நிகழ்ச்சி பல முறை ஒளிபரப்பு செய்யப்படும். அதுவும் இந்த லாக்டவுன் நேரத்தில் கேட்க வேண்டுமா? மலரும் நினைவுகள் மாதிரி ராஜ் டிவியின் பழைய நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கவியரசு கண்ணதாசன்.. என்றென்றும் வாலி இவை தினமும் மாலை நேரங்களில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றன.
என்றென்றும் வாலி நிகழ்ச்சி கவிஞர் வாலி அவர்களுக்கு ராஜ் தொலைக்காட்சி கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் நடத்தியது. திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டு வாலியை பெருமைப்படுத்தி பேசியுள்ளனர்.

ராஜ் தொலைக்காட்சி
சன் டிவி ஆரம்பித்த ஓரிரு வருடத்தில் ராஜ் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பத்தில் திரைப்படங்களின் கேசட் விற்பனை தொழில் செய்து வந்தது. ராஜ் தொலைக்காட்சி ஆரம்பித்த உடன் சலிக்க சலிக்க படங்களை ஒளிபரப்பி வந்தது ராஜ் டிவி.

ராஜ் டிவி சன் டிவி
அப்போதைய காலக்கட்டத்தில் சன் டிவி, ராஜ் டிவி என்று இரண்டு சானல்கள் மட்டுமே இருந்து வந்தது. அப்போது ரியாலிட்டி ஷோக்களுக்கு நிறைய மவுசு இருந்தது. இரண்டும் போட்டி சானல்களாக இருந்த நிலையில்.. இரண்டு சானல்களும் போட்டி போட்டுகொண்டு படங்கள், நிகழ்ச்சிகள் என்று ஒளிபரப்பு செய்து வந்தன.

என்றென்றும் வாலி
சன் டிவியில் கலைஞருக்கு பாராட்டு விழா.. ஜெயா தொலைக்காட்சியில் முதல்வர் ஜெயலலிதா அம்மாவுக்கு பாராட்டு விழா என்று களைகட்டத் துவங்கி இருந்த நேரம்...ராஜ் தொலைக்காட்சி என்றென்றும் வாலி என்று கவிஞர் வாலிக்கு பாராட்டு விழா நடத்தியது.

எம்எஸ்வி இளையராஜா
மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, இசை ஞானி இளையராஜா, உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்து இருந்தனர். இவர்கள் நீண்ட உரையும் நிகழ்த்தி இருந்தனர். நீண்ட மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியை ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரின் வர்ணனையுடன் இப்போது தினமும் மாலை 5:00 மணிக்கு என்று பகுதி பகுதியாக ஒளிபரப்பி வருகிறது ராஜ் டிவி.

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன் என்கிற இந்த நிகழ்ச்சியையும் கண்ணதாசன் எழுதிய வசனங்கள் குறித்து ஒரு எபிசோட், அவர் எழுதிய பாடல்கள் குறித்து ஒரு எபிசோட் என்று பிரித்து ஒளிபரப்பி வருகிறது ராஜ் டிவி. இந்த் நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்கனவே பல முறை ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்தான்...!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications