யக்காவ்..கேட்டியா.. ஓடிப்போன வினோதினி வீட்டுக்கு வந்துட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் பாவம்.. ஒரு வாரமா செம்பா பொண்ணுக்கு சோதனை மேல சோதனைங்க. ஒரே அழுகாச்சிதான் போங்க.

சீரியல் விரும்பிகளுக்கு தாங்கள் சீரியல் பார்க்க நேரமில்லைன்னாலும், கதையையாவது கேட்டுடணும். இப்படித்தான் பக்கத்து வீட்டுல ரெண்டு லேடீஸ் பேசிக்கறாங்க.

Raja Rani: Runaway Vinothini is back home

செம்பா புருஷன் கார்த்திக் தங்கச்சி வினோதினி தான் காதலிச்ச பையன் கூட வீட்டுக்கு தெரியாம ஓடிப் போயிட்டான்னு கதை சொன்னியேடி இப்போ என்னாச்சுடி.. அக்கா கேட்கறாங்க..

யக்காவ்..அதை ஏன் கேட்குறே..உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பார்த்தியா...வினோதினி ஓடிப் போக, வீடே செம்பா மேல கடுப்பா இருக்குதுக்கா. அவதான் வினோதினிய அனுப்பி வச்சுட்டான்னு ஒரே திட்டு.

Raja Rani: Runaway Vinothini is back home

அந்த புள்ள கற்பூரத்தை அடிச்சு சத்தியம் செய்ய வந்தாலும் விடலக்கா... அவதான் காரணம்னு திட்டறாங்க. இந்த கார்த்திகே அதான் செம்பாவோட புருஷன் இருக்கானே அவன் கூட கட்டுன பொண்டாட்டிய நம்பலைக்கா..

பாவிப்பய எப்படி எல்லாம் செம்பாகூட இருந்தான். ஆன்னா ஊன்னா கட்டிப் புடிச்சுக்குவான்.. அவளை தூக்கி சுத்துவான்.. சாப்பாடு ஊட்டுவான்.. அதை எல்லாம் லூசுப் பய மறந்துட்டு பொண்டாட்டி பொய் பேசுவாளா, நம்ம பொண்டாட்டி ஸ்பெஷலாச்சேன்னு தெரிய வேணாம்.. போட்டு பாடு படுத்திட்டான்க்கான்னு .. தங்கச்சி சொல்றா

Raja Rani: Runaway Vinothini is back home

ஏய்.. ஒரேயடியா கதையை நீட்டி முழக்காதே.. கல்யாணம் யாரு கூட நடந்துச்சு.. இல்லை விநோதினியை கண்டு பிடிச்சுட்டாங்களா அதை சொல்லுடி இவளேன்னு அக்கா கேட்கறா.

அதைத்தான் சொல்ல வரேன்க்கா.. போன்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பறா செம்பா. அதை கேட்ட உடனே தான் வீட்டுல அப்பா அம்மா நினைவு வருது. ஒரு வழியா ஹரீஷ் கிட்ட பேசி புரிய வைக்க முயற்சி செய்யறா.

அதுக்குள்ளே வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடறாங்க. செம்பா கோயிலுக்கு போயி, கையில கற்பூரம் ஏத்திட்டு வர்றா..செம்பா வந்துட்டா வினோதினியைப் பார்த்துட்டு வந்திருக்கானு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட போட்டு குடுத்துடறா ரெண்டாவது அண்ணி.

செம்பா விழிக்க, வினோதினி கோயிலுக்கு போயிருக்கான்னு சொன்னாங்க.. வினோதினியை பார்த்துட்டு வரியான்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கறாங்க.

Raja Rani: Runaway Vinothini is back home

ஆமாம்னு செம்பா சமாளிக்க சொல்ல, வீட்டுல இருக்கறவங்க எல்லாரும் செம்பாவை அதிர்ச்சியா பார்க்கறாங்க.. அக்கா அந்த நேரம் .பாருங்க. நம்ம வினோதினி வீட்டுக்கு வந்து நிற்கறான்னு சொல்றா தங்கச்சி.

அப்புறம் என்னடி.. இனிமே செம்பா செம்பான்னு அவன் சுத்துவான், இவ சின்னய்யா சின்னையான்னு கொஞ்சுவா.. அதையும் வெட்கம் கெட்டு என்கிட்ட வந்து சொல்லுவே நீன்னு கேட்கறாங்க அக்கா.

யக்கா நீ கேட்டதுனாலதான் நான் எல்லாத்தையும் சொன்னேன்.. என்னமோ நானா வந்து செம்பாவும், சின்னையாவும் கட்டிப் புடிச்சுக்கிட்டாங்கன்னு சொல்ற மாதிரி பேசற.. நீ பெரிய ஆளுக்கா.. நல்ல போட்டு வாங்குவே.. இனிமே அது என்கிட்டே நடக்காதுன்னு சொல்றா தங்கச்சி.

பார்க்கலாம் பார்க்கலாம் போடின்னு சிரிச்சுகிட்டே சொல்றாங்க அக்கா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+